கிப்ரோம் கின்ஃபே அரேகாவி மற்றும் சிகாபு கெப்ரெமரியம் (வலது) ஆகியோர் ஜூன் 23 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் அடங்குவர். அவர்களின் உடல்கள் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

படக்குறிப்பு,கிப்ரோம் கின்ஃபே அரேகாவி மற்றும் சிகாபு கெப்ரெமரியம் (வலது)


“குடும்பத்தினர் ஆறுதல் அடைந்து, அவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்குகள் அனைத்தையும் செய்தோம். ஆனால், எனக்கு அந்த ஆறுதல் கிடைக்காது” என்கிறார் தனது மகன் கிப்ரோமை இழந்து தவிக்கும் தந்தை கின்ஃபே அரேகாவி.”இது என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தத்தையும் துக்கத்தையும் தரப்போகிறது”என அவர் கூறுகிறார்.

கிப்ரோம் கின்ஃபே அரேகாவி, இந்த ஆண்டு ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் கஞ்சா கடத்தியதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் ஒருவர்.உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் இரானுக்கு அடுத்தபடியாக சௌதி அரேபியா தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

பல எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு, முறைப்படியான மதரீதியான சடங்கு என்பது நம்பிக்கையின் ஓர் இன்றியமையாத அங்கமாகும். இதில் சடங்கு முறையில் பயன்படுத்தப்படும் துணியால் உடல் சுற்றப்பட்டு, மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்படும்.ஆனால், 25 வயதான கிப்ரோமின் உடல் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படாததால், அவருக்கான இறுதிச் சடங்குகளில் இதைச் செய்ய முடியவில்லை.

உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் இரானுக்கு அடுத்தபடியாக சௌதி அரேபியா தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
\பல எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு, முறைப்படியான மதரீதியான சடங்கு என்பது நம்பிக்கையின் ஒரு இன்றியமையாத அங்கமாகும். இதில் சடங்கு முறையில் பயன்படுத்தப்படும் துணியால் உடல் சுற்றப்பட்டு, மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்படும்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, ஜூலை 27-ஆம் தேதி வரையிலான ஓராண்டில் சௌதி அரேபியா 116 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

“உடலைத் திருப்பி அனுப்ப மறுப்பது என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் அது தண்டனையை நீட்டிக்கிறது” என்கிறார் ஐரோப்பிய சௌதி மனித உரிமைகள் அமைப்பின் மூத்த ஆய்வாளரும்(ஈஎஸ்ஓஹெச்ஆர்), கடுமையான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் மக்களைப் பாதுகாக்கும் ‘ரிப்ரீவ் மெனா’ (மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா) என்ற தொண்டு நிறுவனத்தின் வழக்குப் பணிகளுக்கான ஆலோசகருமான துவா தைனி.

மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்துக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நஸிலா கானியா, உடல்களைத் திருப்பி வழங்காமல் வைத்திருப்பதாக சௌதி அரேபியா மீது கூறப்படும் குற்றச்சாட்டை “சித்திரவதை துஷ்பிரயோகம்” என்று விவரித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் அசிர் பகுதியில், கமிஸ் முஷைத் சிறைக்கூடத்தில் ஜூன் 23-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களுக்கும், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.அவர்களது குடும்பத்தினரிடம், மரணமடைந்தவர்களின் தனிப்பட்ட உடைமைகளோ அல்லது இறப்புச் சான்றிதழோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிப்ரோம் கின்ஃபே அரேகாவி, 2020-ஆம் ஆண்டு முதன்முதலாக சௌதி அரேபியாவுக்குச் சென்றார். அப்போது அவரிடம் செல்லுபடியாகும் விசா இல்லை. அவருடன் அவரது தந்தையான கின்ஃபேவும் சென்றுள்ளார்.அவர்கள் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.எனினும், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, கிப்ரோம் மீண்டும் சௌதி அரேபியாவுக்குச் செல்ல முடிவு செய்தார்.

செங்கடலைக் கடந்து, ஏமன் வழியாக நடந்து செல்வதற்காக, நெரிசல் மிகுந்த ஒரு படகில் அவர் பயணம் செய்தார்.2023-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவின் எல்லையைக் கடக்கும்போது கிப்ரோம் மீண்டும் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சாட்டப்பட்டது.மூன்று மாதங்கள் சிறையில் இருந்த பிறகு, தனது மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கின்ஃபே கூறுகிறார். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு, ஜூன் மாதம் திடீரென மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

“அவரது மரணத்தைப் பற்றி நான் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன்” என்று அவர் தெரிவித்தார்.தனது மகன் நிரபராதி என்றும், சௌதி அரேபியாவில் அவர் தவறாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் கின்ஃபே நம்புகிறார்.”எனது மகன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதைக் காட்டும் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறும் கின்ஃபே,”அவரது இறப்புச் சான்றிதழையோ, அவருடைய உடைமைகள் எதையுமோ, அவரது உடலையோ யாரும் என்னிடம் வழங்கவில்லை. நான் அமைதியாக அழுது துக்கப்படுகிறேன். வேறு என்ன செய்ய முடியும்?”என்கிறார்.

“என் மகனின் உடலைப் பார்க்க முடியாமல் இருப்பது என் மனதை மிகவும் பாரமாக்குகிறது,” என்கிறார் சிகாபு கெப்ரெமரியத்தின் தாயார் லெட்டெகிறிஸ்டோஸ் கெப்ரெட்சாடிக்

தனது மகன் நிரபராதி என்றும், சௌதி அரேபியாவில் அவர் தவறாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் கின்ஃபே நம்புகிறார்.அதே நாளில், அதே சிறையில், சிகாபு கெப்ரேமரியாம் என்பவருக்கும் இதே குற்றத்திற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 26 வயதான அவர், எத்தியோப்பியாவின் மத்திய டிக்ரே பகுதியில் உள்ள கிராமப்புற பகுதியை சேர்ந்த குடும்பத்தின் எட்டு குழந்தைகளில் மூத்தவர்.18 வயதைத் தாண்டிய பிறகு, வறுமை மற்றும் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தந்தை ஹாகோஸ் கெப்ரேமெஸ்கெல் கூறுகிறார்.

படக்குறிப்பு,குறியீட்டு முறையில் இறுதிச்சடங்குகளை நடத்தினாலும், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படாவிட்டால், தங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருக்கும் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.

“எங்கள் பகுதியில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் இல்லை. எனக்கு உதவுவதற்காக அவர் சௌதி அரேபியா சென்றார்” என்கிறார் ஹாகோஸ்.சிகாபு போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.அவர் தனது குடும்பத்தினருடன் கடைசியாக பிப்ரவரி மாதம் பேசினார்.”விரைவில் வீட்டுக்கு வந்து திருமணம் செய்துகொள்வதாக அவர் கூறினார்” என்று ஹாகோஸ் தெரிவித்தார்.

அவரது தாயார் லெட்டெக்ரிஸ்டோஸ் கெப்ரெட்சாடிக், மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால், இறுதியில் அவர் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.”எனது குழந்தைகள் அனைவரும் பெண்கள். அவர் தான் ஒரே ஆண் குழந்தை. தங்களது சகோதரர் விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று அவர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

சிகாபு

அவருக்காக திருமணப் பாடல்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். இப்போது, என்னை விட அவர்கள் அதிக மனவேதனையில் உள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.சௌதி அரேபியாவில் வசிக்கும் உறவினர்கள் மூலம் சிகாபுவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த அவரது கிறிஸ்தவ குடும்பத்தினர், தங்களது உள்ளூர் தேவாலயத்தில் அடையாளப்பூர்வமான இறுதிச் சடங்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர்.

“அவரது உடல் ஏன் வீட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்கிறார் லெட்டெக்ரிஸ்டோஸ்.வழக்கப்படி 40 நாட்கள் துக்கம் அனுசரித்த அவர், “இது எங்களது துயரத்தை மிகவும் அதிகமாக்கி, எங்களது இதயங்களை உடைக்கிறது” என்று கூறுகிறார்.சிகாபுவின் பெற்றோர், தங்கள் மகன் செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்கான ஆதாரங்களை சௌதி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், வேறு யாரேனும் அவரைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 75% பேர் வெளிநாட்டவர்கள் என்று கூறுகிறது.

பாதிக்கப்படக்கூடிய நபர்களை குற்றவியல் வலைப்பின்னல்கள் பயன்படுத்திக் கொள்வதாக தைனி கூறுகிறார்.”சில எத்தியோப்பிய வழக்குகளில், எல்லையைக் கடக்க உதவுவதற்குப் பதிலாக பொருட்களை எடுத்துச் செல்லுமாறு தங்களிடம் கூறப்பட்டதாகக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், பாகிஸ்தானிய வழக்குகளில், சிலர் தடைசெய்யப்பட்ட பொருட்களை விழுங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், சில சமயங்களில் வற்புறுத்தலின் பேரிலோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரிலோ அவ்வாறு செய்யச் சொல்லப்பட்டதாகவும் நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம்” என்று தைனி விளக்குகிறார்.

ஹாகோஸ் கெப்ரெமேஸ்கெல், தனது மகனின் ஆன்மா அமைதியடையுமா என்பது குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்கிறார்.

2015-ஆம் ஆண்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சௌத் அரியணை ஏற்றதிலிருந்து, சௌதி அரேபியாவில் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஈஎஸ்ஓஹெச்ஆர் மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 42% பேர் வெளிநாட்டவர்கள்.2025-ஆம் ஆண்டில் சௌதி அரேபியா 356 மரண தண்டனைகளை நிறைவேற்றியதாக அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதுவே ஓர் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை எண்ணிக்கையாகும்.

சௌதி சட்டத்தின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடலை தூதரகத்தின் செலவில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால், இது ஒருபோதும் நடப்பதில்லை என்று தைனி கூறுகிறார்.”மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்தவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எந்தவொரு வழக்கும் எங்களுக்குத் தெரியவில்லை. சௌதி நாட்டவர்களைப் பற்றிய நாங்கள் ஆவணப்படுத்திய வழக்குகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளின் உடல்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சில குடும்பங்கள் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. இதில் துருக்கி மற்றும் ஜோர்டான் நாட்டவர்களின் குடும்பங்களும் அடங்கும். ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்கிறார் தைனி.தொடர்ந்து பேசிய அவர், “ஜோர்டான் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ் குறிப்பிடத்தக்க வகையில் சுருக்கமாக இருந்தது. உடல் எங்கு புதைக்கப்பட்டது அல்லது மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகள் குறித்து அதில் எந்தத் தகவலும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

கின்ஃபே அரேகாவி.

போதைப்பொருள் குற்றங்களை சௌதி அதிகாரிகள் மிகவும் கடுமையான வார்த்தைகளில் குறிப்பிடுகின்றனர்.கஞ்சா தொடர்பான குற்றத்துக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சௌதி நாட்டவர் ஒருவருக்கு ஜூலை மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்ட உள்துறை அமைச்சக அறிக்கையில், “பூமியில் சீர்கேட்டை ஏற்படுத்தும்” நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது தொடர்பான குர்ஆன் வசனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“போதைப்பொருள் ஏற்படுத்தும் தீமைகளிலிருந்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனைகளை விதிப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. ஏனெனில், போதைப்பொருள் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும், கடுமையான சீரழிவுக்கும் காரணமாகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு சௌதி அரேபியாவில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்திடமும் கேட்கப்பட்டுள்ளது.தற்போது எத்தனை கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறித்த விவரத்தை சௌதி அரேபியா வெளியிடுவதில்லை. ஆனால், நூற்றுக்கணக்கானோர் இருக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“சௌதி அரேபியாவில் ரகசியமாகவோ அல்லது போதிய முன்னறிவிப்பின்றியோ நடைபெறும் மரண தண்டனைகள், கைதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மரணத்துக்குத் தயாராக போதுமான கால அவகாசம் கிடைக்க வேண்டிய உரிமையை மீறுகின்றன” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிரிவின் ஆய்வாளர் ஜோயி ஷியா கூறுகிறார்.

“சௌதி அரேபியாவில் ரகசியமாகவோ அல்லது போதிய முன்னறிவிப்பின்றியோ நடைபெறும் மரண தண்டனைகள், கைதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மரணத்துக்குத் தயாராக போதுமான கால அவகாசம் கிடைக்க வேண்டிய உரிமையை மீறுகின்றன” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிரிவின் ஆய்வாளர் ஜோயி ஷியா கூறுகிறார்.

படக்குறிப்பு,ஒரு கைதி, சிறைச்சாலை அதிக நெரிசலுடன் இருப்பதாகவும், பலர் பிளாஸ்டிக் விரிப்புகளுக்கு அடியில் தூங்குவதாகவும் விவரித்தார்.

‘ஒரு அற்புதம் நடக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்’
இந்த ரகசியத்தன்மை, மரண தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளின் வாழ்க்கையையும் வேதனையால் நிரப்புகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இருப்பிடம் மற்றும் அடையாளத்தை வெளியிட முடியாத ஒரு கைதி, தான் சிறையில் அனுபவிக்கும் சூழலைக் குறித்து தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். எனினும், மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.

இந்த ஆண்டு, தன்னுடன் சிறையில் இருந்த 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவர் பார்த்துள்ளார்.”ஒவ்வொரு முறையும் காவலர்கள் கதவுகளைத் திறக்கும்போது, அடுத்து யாருடைய முறை என்று நாங்கள் யோசிக்கிறோம்”என்று கூறுகிறார் அந்த நபர் .

மரண தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து வருகிறார். ஆனால், மோசமான சம்பவம் ஏதாவது நடந்தால், தனது உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“என் பெற்றோரால் என் உடலைக் கூட பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்” என அவர் பகிர்ந்து கொண்டார்.