2,000 வாக்குகள் கீழ் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ பதவியை பலர் பெற்றுள்ளனர்.

அந்தத் தொகுதிகள் என்னென்ன என்கிற பட்டியலை இங்கே பார்ப்போம்…

அந்தியூர்:

அதிமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர் 1,260 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவபாலனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி, அந்தியூர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.

கம்பம்:

751 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஜெகநாத்மிஷ்ரா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் திமுக வேட்பாளர் எரமகிருஷ்ணன்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், வன்னி அரசு, ரகுபதி
எம்.ஆர்.விஜயபாஸ்கர், வன்னி அரசு, ரகுபதி

திண்டுக்கல்:

1,131 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் நசீர் ராஜாவை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்

கள்ளக்குறிச்சி:

அதிமுகவின் ராஜீவ் காந்தி 798 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷிடம் வெற்றியைத் தவறவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி:

214 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷிடம் இருந்து வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.

கரூர்:

1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதியழகனை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கிள்ளியூர்:

1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சபின்.

கோவில்பட்டி:

843 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் கருணாநிதி வெற்றி. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்.

குளித்தலை:

579 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சுரியனூர் ஏ.சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணி.

கும்பகோணம்:

679 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்பழகனைப் பின்னுக்கு தள்ளி தவெக வேட்பாளர் வினோத் வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

மானாமதுரை:

1,208 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் இளங்கோவன் முதல் இடத்தையும், திமுக வேட்பாளர் தமிழரசி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மணப்பாறை:

1,426 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்து உள்ளவர் அதிமுக வேட்பாளர் விஜயகுமார்.

மன்னார்குடி:

1,566 வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் காமராஜ் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி ராஜாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

பழனி:

693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன் குமாரிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

பாபநாசம்:

1,065 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாஜகான், தவெக வேட்பாளர் அசாருதீன் உதுமான் அலியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

பரமத்தி-வேலூர்:

308 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

போளூர்:

227 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அபிஷேக்கிடம் தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றியை நழுவவிட்டுள்ளார்

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:

1,867 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முத்துராஜா தவெக வேட்பாளர் ஷெரீப்பை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

ஶ்ரீவைகுண்டம்:

1,186 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சரவணன் அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

திருமயம்:

1,492 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சிந்தாமணி.

திண்டிவனம்:

734 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் வன்னி அரசு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளவர் அதிமுக வேட்பாளர் அர்ஜூனன்.

திருக்கோவிலூர்:

285 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் ஆர்.பரணிபாலாஜியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பத்தூர்:

1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளர் பெரிய கருப்பனிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

உதகமண்டலம்:

976 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இப்ராஹிமை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

போஜராஜன் பா.ஜ.க
போஜராஜன் பா.ஜ.க

உசிலம்பட்டி:

1,805 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் எம்.விஜய் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

வேப்பனப்பள்ளி:

138 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஶ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி:

910 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சிவகுமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

*இந்தப் பட்டியலில் 2,000-க்கும் கீழ் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.