அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரிக்கை வலுத்துள்ளதே என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதற்கு, ”வலுத்துள்ளது ; ஆனால், பழுக்கவில்லை” என்று சொல்லிவிட்டுப் போனார். இந்த நிலையில்தான் தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி


தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றமும் இருக்கலாம் என்கிறார்கள். தற்போது திமுகவில் சீனியர் vs ஜூனியர் பிரச்சனை உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் இந்த சீனியர் – ஜூனியர் விவகாரத்தை கிளம்பிவிட்டார். அப்போதே அது பெரிய அளவில் பூதாகரமாகியது. இந்த நிலையில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகும் பட்சத்தில் அது திமுகவில் சில சீனியர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஏனென்றால் உதயநிதிக்கு ப்ரோமோஷன் கிடைக்கும் பட்சத்தில்.. அவர் தனக்கு உரிய டீமை எதிர்காலத்தில் கொண்டு வர பார்ப்பார். அதாவது சீனியர்களை விரும்ப மாட்டார். அப்பா செட்டில் உள்ள சீனியர்களை தவிர்த்துவிட்டு தனக்கு என்று ஒரு டீமை உதயநிதி ஸ்டாலின் கொண்டு வர பார்க்கலாம். இதை கருதியே சில சீனியர்கள் உதயநிதி ப்ரோமோஷன் காரணமாக அப்செட்டாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.