உள்ள துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டால் திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பது கட்சிக்கு கட்சி வேறுபடும். பொதுவான பணிகள் என பார்த்தால் கட்சியின் செயல்பாடுகளை நிர்வகிப்பது, கட்சியின் கொள்கைகளை வகுப்பது, கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுவது ஆகியவை முக்கிய பணிகளாகும்.

அது போல் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது, தேர்தல்களில் பங்கேற்பு, அரசுடன் தொடர்பில் இருப்பது , கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பது போன்றவை பொதுச் செயலாளரின் கடமையாகும். கட்சியை வலுப்படுத்த போதிய முயற்சிகளை எடுப்பதும் ஆகும். பம்பரம் சுருக்கமாக சொல்ல போனால் பொதுச் செயலாளர் என்பவர் பம்பரம் போல் சுழல வேண்டும். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவ்வப்போது துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரால் தொடர்ந்து கட்சியில் ஆக்டிவ்வாக இருக்க முடியவில்லை என்பதால் அவர் நீக்கப்படலாம் என்கிறார்கள். கட்சியின் நலன் கருதி அவராகவே விலக முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

துரைமுருகன் 87 வயதாகும் துரைமுருகன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். வேலூரில் திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இவர் சொல்வதுதான் வேலூர் மாவட்ட திமுகவில் சட்டமாக இருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும் அந்த பொறுப்பிற்கு ஸ்டாலின் வந்தார்.

கட்சி நிர்வாகம் அவர் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக இல்லாவிட்டாலும் கொஞ்ச நஞ்சம் செய்தாலும் மூத்த தலைவர்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அவர்களே கட்சி பதவிகளிலும் மக்கள் பிரதிநிதித்துவ பதவிகளிலும் இருக்கிறார்கள். 2026 தமிழக சட்டசபை தேர்தல் போதாக்குறைக்கு அவர்களது மகன், மகள் உள்ளிட்டோரும் இந்த பதவிகளில் இருக்கிறார்கள். இதனால் புதியதாக கட்சியில் சேரும் நிர்வாகிகள், அடுத்த கட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைகிறார்கள். இது வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்க என்ன செய்வது என ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

திமுகவின் எதிர்காலம் எனவே மூத்த தலைவர்களை மாற்றும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடவுள்ளார் என்கிறார்கள். திமுகவின் எதிர்காலமான உதயநிதிக்கு தோதான நிர்வாகிகளை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். எனவே துரைமுருகனில் இருந்து அந்த மாற்றத்தை கொண்டு வர எண்ணியுள்ளாராம்.

70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களை 70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதாவது விழுப்புரம் என்றால் பொன்முடி, காட்பாடி என்றால் துரைமுருகன், விருதுநகர் என்றால் கேகேஎஸ்எஸ்ஆர், திருச்சி நேரு, திருவண்ணாமலை என்றால் எ.வ.வேலு, திண்டுக்கல் பெரியசாமி, ஈரோடு முத்துசாமி என இந்த பட்டியல் நீள்கிறது. 75 வயதுக்கு மேல் இதனால் படிப்படியாக மூத்தவர்களுக்கு ஓய்வு தர திட்டமிட்டுள்ளாராம்.

பாஜகவில் கூட 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சியிலும் மக்கள் பிரதிநிதித்துவத்திலும் இடம் இல்லை. அந்த ஃபார்முலாவைத்தான் தற்போது திமுக கையில் எடுக்க போகிறது. இதுதான் திமுகவின் வளர்ச்சிக்கு நன்மையை தரும் என ஸ்டாலின் கருதுகிறாராம். துரைமுருகன் துரைமுருகனை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி விட்டால் அடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. பொருளாளராக இருக்கும் டி.ஆர். பாலுவா, இல்லை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவா என்ற சந்தேகம் எழுகிறது. 87 வயது இதுகுறித்து புதிய தலைமுறைக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், துரைமுருகனுக்கு 87 வயதாகிறது. அவர் 50 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவருடைய மகன் கதிர் ஆனந்தும் வேலூர் எம்பியாக இருக்கிறார்.

துரைமுருகனின் பதவி பறிப்பு இந்த நிலையில் துரைமுருகனின் பதவி பறிக்கப்பட்டால் அந்த இடத்திற்கு பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலுவை கொண்டு வந்தால் அவருடைய வயது 83 ஆகிறது. 40 ஆண்டுகள் நாடாளுமன்றத்தையே அலறவிட்டவர். தென் சென்னையை கட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆனால் மேலும் 2 அல்லது 3 ஆண்டுகளில் அவருக்கும் வயோதிகம் காரணமாக கட்சி செயல்பாடுகளில் செயல்பட முடியாமல் சுணக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது? ஆ.ராசா இதனால் டி.ஆர்.பாலுவுக்கு பதில் ஆ.ராசாவை திமுக பொதுச் செயலாளராக்கலாம் என்கிறார்கள்.

ஆ.ராசாவுக்கு 62 வயதுதான் ஆகிறது. எனவே ஆ.ராசாவுக்கு திமுக பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார். திமுகவுக்கு இளம் ரத்தம் பாய்ச்ச துடிக்கும் ஸ்டாலினின் யுத்தி பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்