கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள சட்டமன்ற தொகுதிகள் முழுமையாக திமுக வசமாக வேண்டும் என அஜென்டா போட்டு வேலை பார்த்து வருகிறது திமுக தலைமை.

படக்குறிப்பு: SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தி இளைஞரணியில் 2011ம் ஆண்டு பொறுப்பு பெற்றவுடன், மறைவுற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது திமுக தலைமை. தெற்கு மாவட்டத்திற்குள் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபனை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், தெற்கு மாவட்டத்திற்கு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினரான கே.ஈஸ்வரசாமியை பொறுப்பாளராக நியமித்துள்ளது மேலிடம்.

படக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின்

புதிதாக பொறுப்பேற்றுள்ள கே.ஈஸ்வரசாமி எம்பி இந்த இரண்டு தொகுதிகளையும் திமுக வசமாக்கிவிட வேண்டுமென்ற இலக்கோடு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மண்டல பொறுப்பு அமைச்சராக இருப்பதும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களின் நகர்வுகளை அதிமுக உற்றுநோக்கி வருகிறது.

படக்குறிப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

இது இவ்வாறு இருக்க, சட்டமன்ற ேதர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் திமுக கேண்டிடேட் யார் என்ற கேள்விதான் தற்போது ஹாட் டாஃபிக்காக உள்ளது. உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் என இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் இம்முறை போட்டியிட வேண்டும் என உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தான் டிரெண்டிங்கில் உள்ளது.

இது குறித்து அறிய சில திமுக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்தோம்… வழக்கமாக ஒருவர் ஒரு தொகுதியில் வேட்பாளராக முயற்சி செய்வது வாடிக்கை. ஆனால் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி இரு தொகுதிகளிலும் தனக்கு நல்ல தொடர்பு உள்ளதால், இரு தொகுதிகளையும் மையப்படுத்தி தொடர்ச்சியாக வேலை செய்தும் முக்கிய நிர்வாகிகள், கழக முன்னோடிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் எதேனும் ஒன்றில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் கனலாக உள்ளார்.

படக்குறிப்பு: உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி

உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அதிகப்படியாக சுமார் 70 ஆயிரம் வாக்குகளும், அதிகப்படியாக 84 வாக்குச்சாவடிகளும் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் தான் உள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதனை அரசியல் ஆசானாக ஏற்றுகொண்டு, அவரின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு இளைஞரணியில் ஒன்றிய, மாவட்ட பொறுப்புக்களை வகித்து, தற்போது கழக ஒன்றிய செயலாளராக சிறப்பாக பணியாற்றி வரும் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி வேட்பாளராவது உறுதி என்கின்றனர் ஆணித்தரமாக.

SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தியிடம் கிழக்கு ஒன்றியப்பகுதியில் உள்ள தொண்டர்கள் தங்களுக்கு தேவையானதை அதை உரிமையோடு கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அந்தளவிற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளுடனும், ஊராட்சி பிரதிநிதிகளுடனும், சக தொண்டர்களுடனும் இணக்கமாக இருந்து வருகின்றார். ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் இல்ல சுக,துக்க நிகழ்வுகளில் தவறாது பங்கேற்பார். கழகத் தோழர்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பார்.

படக்குறிப்பு: பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி

அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் ஏற்றத்தாழ்வுகளின்றி நேசத்தோடு பழகக்கூடியவர். இள வயதுக்காரர். இள ரத்தம் என்பதால் கட்சிப்பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். தற்போது கூட துணை முதல்வரின் பிறந்தநாளன்று தூய்மைப் பணியாளருக்கும், இன்னும் சில நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்து பரிசளித்தார். திருப்பூர் மாவட்ட அளவில் இவரின் ஒன்றிய அலுவலகம் தான் பெரியளவில் கட்டிடமாக இருக்கும். கட்சி தொடர்பான அனைத்து டேட்டாக்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். நல்ல மனிதர், நல்ல நிர்வாகி.

படக்குறிப்பு:முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் ஆகியோருடன் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி

அதோடு, SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் சங்கத்திற்கான பல வளர்ச்சிப் பணிகளையும், அவர்களின் பிரச்னைகளையும், வருவாயைப் பெருக்கும் பணியையும் திறம்பட செய்து வருகிறார். நகரப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும், அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பரிச்சயமானவர்.

படக்குறிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தி

தனது கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இலவச பட்டா, வீடற்றவர்களுக்கு தொகுப்பு வீடுகள், சாலை, தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி போன்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.விவசாயிகளுக்கென பாசானம் முறையாக கிடைத்திடவும், ராஜவாய்க்கால், பூசாரி நாயக்கர் குளம் உபரி நீர் திறப்பு செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றிய வருகிறார்.

பல ஆண்டுகளாக பொதுமக்களின் நன்மதிப்போடு உடுமலைப்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபலமான காளியம்மன் அன்கோ நிறுவனம் இவருடையதுதான். அதோடு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பொருளாதாரத்திலும், சமூக பலத்திலும் படு ஸ்ட்ராங் என்றார்.

படக்குறிப்பு: உடன்பிறப்பே வா நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன் SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தி

தொழில், கட்சி என எதிலும் குற்றப்பின்னணி இல்லாதவர். PEN டீம் சோர்ஸ்கள் இவரின் செயல்பாடுகளை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. கேண்டிடேட் ஹாட்லிஸ்ட்டில் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தியின் பெயரும் தவிர்க்கமுடியாத இடத்தில் உள்ளதால் உளவுத்துறையும் இவரின் பின்னணி குறித்து விசாரித்து “ஓகே” ரிப்போர்ட் அடித்துள்ளதாம்.

இதையடுத்து SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தியைச் சந்தித்தோம்.. சின்னவீரம்பட்டி இந்திரா நகர் கிளைக் கழக செயலாளராக 1998 இல் தொடங்கி, 2006 இல் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர், 2012 மற்றும் 2015 என இருமுறை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், 2021 திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், 2022 முதல் தற்போது வரை உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என படிப்படியாக உயர்ந்துள்ளேன்.

படக்குறிப்பு: அமைச்சர் அர.சக்கரபாணியுடன் SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தி

உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளிலும் வளர்ச்சி பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகின்றேன். தார்ச்சாலை, கான்கிரீட் சாலை, பேவர்பிளாக் சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சித் திட்டங்களை  மேற்கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது.

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் என இரு தொகுதிகளையும் எப்படியாவது அதிமுகவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற டாஸ்க் மாவட்ட பொறுப்பாளருக்கும், மண்டல பொறுப்பாளருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர் தேர்வில் மிகச்சரியான முடிவை எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட குடிநீர் நீரேற்றும் நிலையங்களில் கூடுதலாக நீரை ஏற்றி, கூடுதலான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 1.25 லட்சம் மதிப்பில் 20 ஹெச்.பி. திறனுள்ள மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கான தொகையை கணக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சின்ற தலைவர் லதா அய்யாவுவிடமிருந்து பெற்றுக்கொடுத்தேன்.  இதை அவர் தனது சொந்தப்பணத்தில் இருந்து வழங்கியுள்ளார்.

படக்குறிப்பு: துணைமுதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தனது ஒன்றியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு கே.ஈஸ்வரசாமி எம்பி தலைமையில் நலத்திட்ட உதவிகளை SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி வழங்கினார்.

உடுமலை அருகேயுள்ள மருள்பட்டி குளம் 108 ஏக்கரில் அமைந்துள்ளது. இக்குளத்தை தூர்வாரி வருடத்திற்கு இரு முறை பிஏபி நீரை நிரப்பி, சுற்றிலும் நடைபாதை அமைத்து பறவைகள் சரணாலயமாக்க வேண்டும். மேலும், படகு சவாரி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு,விளையாட்டு அம்சங்களை நிறுவி தரமான சுற்றுலாத்தளமாக்க வேண்டும். அதோடு, குளத்தில் நீர் நிரப்புவதால் இப்பகுதியில் நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக்காட்டி முதல்வருக்கும், மாவட்ட அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதனுக்கும் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளேன்.

படக்குறிப்பு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கே.ஈஸ்வரசாமி எம்பி, இல.பத்மநாபன், SKM தங்கராஜ்(எ) SK மெய்ஞானமூர்த்தி

பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலையிலுள்ள பழைய குப்பைக் கிடங்கை சுத்தம் செய்ய முயற்சி மேற்கொண்டு ரூபாய் 2 கோடி 64 லட்சத்தில் நிதி ஒதுக்கி தற்போது பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய அளவிளான கண்காட்சி நடத்தும் வகையில் கோவை கொடிசியா போல அரங்கம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குப்பைக்கிடங்கின் பின்பறமுள்ள ஐஸ்வர்யா நகர் 60 அடி சாலையை இணைத்து அதன் வழியாக பழநி தேசிய நெடுஞ்சாலையை அடையும் வகையில் புதிய சாலை அமைக்க வேண்டும். குப்பைக்கிடங்கு-ஐஸ்வர்யா நகர் சாலையை இணைப்பதற்கு இடையில் இந்து சமய அறநிலையத்துறையின் இடம் உள்ளது. அதனைப் பயன்படுத்தி அவ்வழியே சாலை அமைத்தால், தாராபுரம் சாலையிலிருந்து பழநி தேசிய நெடுஞ்சாலைக்கு சுலபமாக செல்லலாம். வாகன ஓட்டிகளுக்கு நேரச்செலவு மிச்சமாகும். இதுதொடர்பாகவும், முதல்வருக்கும் மாவட்ட அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதனுக்கும் மனு கொடுத்துள்ளேன்.

திருமூர்த்தி அணையை நீராதாரமாகக் கொண்டு 5 பேரூராட்சிகள், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பழுதடைந்ததால் அப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதித்து பற்றாக்குறை நிலவியது. இந்த பிரச்னையை அண்ணன் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக தற்போது 2.98 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி

குறிச்சிக்கோட்டை-எலையமுத்தூர் மேட்டுக்காடு வரையிலான குடிநீர் குழாய்களை புதுப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அண்ணன் அமைச்சர் சாமிநாதனிடம் முன்வைத்துள்ளேன். விரைவில் ரூபாய் 4 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் துவங்க உள்ளது. மேற்கண்ட குடிநீர் திட்டங்கள் நிறைவேறினாலே போதும். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் இனி குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றார்.

திமுகவின் கொள்கைகளையும், புதிய திட்டங்களையும் பொதுக்கூட்டம் கூட்டி பட்டி தொட்டியெங்கும் பரப்பி வருகின்றோம். எஸ்.ஐ.ஆர் பணிகளில் தனியாக டீம் போட்டு வேலை செய்துள்ளோம். ஒன்றிய அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துள்ளோம். மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவதால் கட்சி செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டு செல்ல முடிகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 என்ற இலக்கை கொண்டு களமிறங்கி இமாலய வெற்றியைப் பெற்றோம். அதுபோலவே வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தலைமை நிர்ணயித்த இலக்கை அடைவோம்.

படக்குறிப்பு: நலத்திட்டப் பணிகளை SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி துவக்கிவைத்தார்

மடத்துக்குளம் அல்லது உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தாங்கள் முயற்சி செய்கிறீர்களா எனக்கேட்டோம். முயற்சி செய்வது உண்மைதான். தலைமை வாய்ப்பளித்தால் களமிறங்கத்தயார். எங்கள் மாவட்ட அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினருமான அருமை சகோதரர் கே.ஈஸ்வரசாமி, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் எங்கள் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அதேபோல கட்சிப்பணிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். அவர்களின் உந்துதல்களே எங்களை அயராது உழைக்கச் செய்கின்றன. எங்களிடம் இணக்கமுள்ளதால் சுணக்கமின்றி ஆர்வத்துடன் கழகப் பணியாற்றி வருகின்றோம் என்றார்.

திமுகவின் கட்சி கட்டமைப்பில் மாவட்ட செயலாளருக்கு பின்னர் ஒன்றிய செயலாளர் பொறுப்புதான் தான் அந்தஸ்தும் அதிகாரமிக்க பதவியாகவும் உள்ளது. தான் பொறுப்பு வகிக்கும் ஒன்றியத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 25 சதவிகித வாக்குகளுக்கு பொறுப்புதாரியாகவும் ஒன்றிய செயலாளர் உள்ளார்.அந்த அடிப்படையில் பல்வேறு தொகுதிகளில் மாவட்ட செயலாளருக்கு அடுத்தபடியாக ஒன்றிய செயலாளர்களுக்கு வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி பலரும் எம்எல்ஏக்களாக உருவெடுத்துள்ளனர்.

படக்குறிப்பு: அமைச்சர் சாமிநாதனுடன் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி

திமுக தலைமை 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் இளைஞர், மேல்மட்ட செல்வாக்கு, கட்சியில் ஒன்றிய பொறுப்பு, சமூக பலம், பொருளாதார நிலை, வியாபாரிகள் சங்க செயலாளர், தொகுதி முழுக்க வாக்காளர்களிடம் நல்ல அறிமுகம் என வலுவான நிலையிலேயே வேட்பாளர் பட்டியலில் தொடர்கிறார் என்கிறார்கள்.