முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று காலை அவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் ஆகியோர் உடன் உள்ளனர்.

23ம் தேதி நாளை உடுமலையில் முதல்வர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முதல்வருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா இல்லையா என திமுகவினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.