நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாருக்கு எதிராக அரசியல் செய்ய போகிறது. யாருடைய அரசியல் வாக்குகளை குறி வைக்க போகிறது என்று பார்க்கலாம். நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய 3 முக்கியமான விஷயங்கள் கவனம் பெற்றன. இதை வைத்தே அவரின் அரசியல் எதிரி யார் என்று கண்டுபிடிக்க முடியும். “

1. திமுக எதிர்ப்பு: திமுகவை எதிர்க்கும் விதமாக “யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் ” என்று கூறி உள்ளார்.

2. பாஜக எதிர்ப்பு: பாஜகவை எதிர்க்கும் விதமாக ” எனக்கு கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது. இறங்கியாச்சு. இனி எதைப்பத்தியும் யோசிக்க கூடாது. நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம். ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போறோம். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது. “பெரியார், காமராஜர்.. அப்படியே திடீரென திமுக நிறுவனர் அண்ணா சொன்னதையும் பேசிய விஜய்.. என்ன சொன்னார் ” தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.” என்றார்.

3. திமுக – பாஜகவை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களுடைய வாக்கு வங்கி விஜய்க்கு செல்லாது. ஆனால்.. அவர்களை ஏற்கனவே எதிர்க்கும் அதிமுக வாக்கு வங்கி விஜய்க்கு செல்லும். இதனாகதான் நேற்று அவர்களை பற்றி விஜய் பேசவில்லை. அதிமுகவின் இடத்தை நிரப்பி.. திமுகவிற்கு எதிராக 2ம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம். இதனால் அதிமுக மீது போகஸ் தருவதை விஜய் தவிர்த்து இருக்கலாம்.

4. அதேபோல் திமுக, பாஜகவை எதிர்க்கும் இன்னொரு கட்சி நாம் தமிழர். அவர்களை பற்றியும் விஜய் பேசவில்லை. இவர்களின் வாக்குகளையும் குறி வைக்கலாம். “திராவிட மாடல்ன்னு சொல்லி.. நாட்டை கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம்தான் இன்னொரு எதிரி! விஜய் பரபர பேச்சு “

5. தொடர் தோல்வியால் அதிமுக, நாம் தமிழர் மீது நம்பிக்கை இழந்தவர்கள்.. திமுக பக்கம் செல்ல விரும்பாதவர்கள் விஜய் பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.