திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக 2016-2021 வரை சிறப்பாக பணியாற்றியவர் தான் JRK என பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணன். அனைத்து தரப்பினருடனும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர். தான் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது தொகுதி மக்களுக்கு தன்னால் இயன்றளவு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைவரின் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாது பங்கெடுப்பதால் JRK மீது பொதுமக்களுக்கு தனிப்பட்ட பாசம் உள்ளது.

இதோ இதற்கு ஒரு உதாரணம்; இன்று (ஆக-22) காலை தனது சொந்தவேலை காரணமாக JRK கணியூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். அங்கு சீருடையில் இருந்த 8,9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் JRK அருகில் வந்து உரிமையுடன் அவரை நலம் விசாரித்தனர். பின்னர் JRK மாணவர்களிடம், என்ன விசயமாக வந்துள்ளீர்கள் எப்படி படிக்கின்றீர்கள் நன்றாக படிக்கவேண்டும் என சொல்லியதோடு ஏதேனும் தேவைகள், குறைகள் இருந்தால் சொல்லவும் என மாணவர்களிடம் சிறிது நேரம் அன்புடன் பேசினார்.

திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணனை சிறுவர்கள் கூட தெரிந்து வைத்துள்ளார்கள். இன்னும் அவரின் “மாஸ்” குறையவில்லை என வங்கியில் இருந்த பொதுமக்களில் சிலர் பேசிக்கொண்டனர்.