பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் இரண்டு ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனிடையே ரஜினிகாந்த குறித்து வீரப்பன் பேசும் ப்ரோமோ வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாளான கடந்த 12ஆம் தேதி படக்குழு வெளியிட்ட நிலையில், அதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வந்தனர்.
‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ளது.