விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. மீதமுள்ள மயான இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்
இந்நிலையில் இந்த மயானத்திற்குள் தனிநபர் ஒருவர் முறைகேடாக கோவில் கட்டியுள்ளார். இதை அகற்றவும் நகராட்சி சார்பில் முயற்சி செய்யப்பட்டு வருகிறார்களாம். ஆனால் இன்றுவரை அகற்றப்பட வில்லையாம்! மயானத்திற்கு செல்லும் வழியிலும் பொது இடங்களை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் முறையான அறிவிப்பு கொடுத்தும், ஆக்கிரமிப்பு செய்திருந்தவர் வேலிகளை அகற்றாததால் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பை நேற்று (பிப்-27) அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.