திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்தியாவின் சுவிட்சர்லாந்த் என அழைக்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இளைஞர்களை குறிவைத்து புரோக்கர் மாமா பயல்கள் கேட்ச் செய்து மசாஜ் செண்டருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு வரும் இளைஞர்களிடம் மசாஜ் செண்டர் என்ற பெயரில் உய்யலாலா நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் பகுதிகளான அண்ணா சாலையிலுள்ள நட்சத்திரம் பெயர் கொண்ட தங்கும் விடுதி, டிப்போ பகுதி, லாஸ்காட் சாலை, எம்.எம்.தெரு, கல்லறைமேடு, பர்ன்ஹில் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பலான தொழில் நடைபெற்று வருகிறது. இதற்கு மொத்த ஏஜெண்டாக பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருந்து வருகிறார்.
ஆனால் கொடைக்கானலில் நடைபெறும் இந்த பலான தொழிலை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. ஏன் தடுக்கவில்லை இதற்கு என்ன காரணம் பணம், காசு, துட்டு, ரூபாய், மணி என்று வாயை அடைத்து விடுகின்றனர். மசாஜ் சென்டர் பெயரில் நடத்தும் விபச்சார விடுதியில் போதைக் காளான், கஞ்சா ஆகியவைகளும் விற்பனை நடைபெற்று வருகிறதாம்?
கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் பல உயிர்கள் போனதைப் போல போதைக்காளனால் உயரிழப்புகள் ஏற்பட்டால் தான் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
எனவே, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்ாணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் விபச்சாரத் தொழில் செய்பவர்களையும், போதைக்காளான் விற்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்பி நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்..
-மலையரசன்.