திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி உடனடியாக மேற்படி இடத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.
மழைநீர் தேங்கியுள்ள இடம் பள்ளமாக இருப்பதால் தான் நீர் தேங்கியுள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை கருத்தில் கொண்டு இந்த சாலையை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மண்டல துணை வட்டாட்சியர் பாரதிராஜா, மடத்துக்குளம் வருவாய் ஆய்வாளர் ராதிகா, கிராம நிர்வாக அலுவலர் பிரித்திவிராஜ் மற்றும் மடத்துக்குளம் பேருராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.