திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, இந்திரா நகரில் வசிக்கும் சிம்சோன், ரம்யா தம்பதியினரின் இளைய மகன் சி.சேன் ஜெரோம். 7 வயதுடைய இச்சிறுவன் ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் தந்தை சிம்சோன் மடத்துக்குளம் வட்டார வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மைத்துறை அலுவலராக பணியாற்றி வருகின்றார்.இவரின் தாய் ரம்யா இல்லத்தரசியா உள்ளார்.

கபிலர் பாடிய சங்க இலக்கிய நூலான ‘குறிஞ்சிப்பாட்டில்’ வரும் 99 வகையான மலர்களின் பெயர்களை வெறும் 30 வினாடிகளில் ஒப்பித்து கலாம் உலக சாதனையாளர் விருது” பெற்றுள்ளார்.உலக சாதனை படைத்த சிறுவன் சி.சேன் ஜெரோம் மாணவனை மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., மற்றும் வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆதிசாமி ஆகியோர் வெகுவாக பாராட்டி கௌரவித்தனர்.


இதுகுறித்து, சி.சேன் ஜெரோமின் தந்தையான சிம்சோன் கூறுகையில் எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். எனது மகளின் பெயர் சி.ஆலிவ் சில்வியா 5ம் வகுப்பு படிக்கிறார். சி.சேன் ஜெரோம் எனது இரண்டாவது மகன். சிறுவயது முதலே மிகவும் அதீத ஞாபக சக்தி கொண்டவன். எதையும் எளிதில் புரிந்து கொள்வான். எனது மகன் கலாம் உலக சாதனையாளர் விருது பெற்று எங்களின் குடும்பத்துக்கே பெருமை சேர்த்துள்ளான். நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என்றார். மேலும், எனது மகனை பாராட்டிய மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஆதிசாமி உள்ளிட்டோர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல்.”
கபிலரின் இந்தப் பாடல் மலர்களின் பெயர்களை பட்டியலிட்டு, தமிழ் இலக்கியத்தில் இயற்கையின் சிறப்பை பறைசாற்றுகிறது.குறிஞ்சிப்பாட்டு நூலில், மலைவாழும் மகளிர் பறித்து விளையாடியதாக 99 வகையான மலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழின் மலர்த் தொன்மையைப் பறைசாற்றும் இந்தப் பூக்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது:
வரிசை மலரின் பெயர் வரிசை மலரின் பெயர் வரிசை மலரின் பெயர்
1 காந்தள் 34 கோங்கம் 67 பாங்கர்
2 ஆம்பல் 35 போங்கம் 68 மரவம்
3 அனிச்சம் 36 திலகம் 69 தணக்கம்
4 குவளை 37 பாதிரி 70 ஈங்கை
5 குறிஞ்சி 38 செருந்தி 71 இலவம்
6 வெட்சி 39 அதிரல் 72 கொன்றை
7 செங்கோடுவேரி 40 சண்பகம் 73 அடும்பு
8 தேமா 41 கரந்தை 74 ஆத்தி
9 மணிச்சிகை 42 குளவி 75 அவரை
10 உந்தூழ் 43 மாமரம் 76 பகன்றை
11 கூவிளம் 44 தில்லை 77 பலாசம்
12 எறுழம் 45 பாலை 78 பிண்டி
13 சுள்ளி 46 முல்லை 79 வஞ்சி
14 கூவிரம் 47 கஞ்சங்குல்லை 80 பித்திகம்
15 வடவனம் 48 பிடவம் 81 சிந்துவாரம்
16 வாகை 49 செங்கருங்காவி 82 தும்பை
17 குடசம் 50 வாழை 83 துழாய்
18 எருவை 51 வள்ளி 84 தோன்றி
19 செருவிளை 52 நெய்தல் 85 நந்தி
20 கருவிளை 53 தாழை 86 நறவம்
21 பயினி 54 தளவம் 87 புன்னாகம்
22 வானி 55 தாமரை 88 பாரம்
23 குரவம் 56 ஞாழல் 89 பீரம்
24 பசும்பிடி 57 மௌவல் 90 குருக்கத்தி
25 வகுளம் 58 கொகுடி 91 ஆரம்
26 காயா 59 செம்மல் 92 காழ்வை
27 ஆவிரை 60 சிறுசெங்குரலி 93 புன்னை
28 வேரல் 61 கோடல் 94 நரந்தம்
29 சூரல் 62 கைதை 95 நாகப்பூ
30 சிறுபூளை 63 வழை 96 நள்ளிருள்நாறி
31 குறுநறுங்கண்ணி 64 காஞ்சி 97 குருந்தம்
32 குருகிலை 65 கருங்குவளை 98 வேங்கை
33 மருதம் 66 பாங்கர் 99 புழகு





