தமிழகம் முழுவதும் 2024 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜூன்-10) வெளியானதையடுத்து, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் முதல் முன்று மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து கெளரவிக்கப்பட்டது.
இதில் சுவாரசியமாக இப்பள்ளியில் பயின்ற கணியூரைச் சேர்ந்த ஜாகிர் ஹூசைனின் மகள்களான இரட்டைச் சகோதரிகள் ஆயிஷா லுபாபா 418 மதிப்பெண்களும், ஆயிஷா உமாமா 417 மதிப்பெண்களும் எடுத்து வியப்பில் ஆழ்த்தினர். இந்த மாணவிகளைப் பள்ளிக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கே.ஈஸ்வரசாமி பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். மேற்படி மாணவிகள் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
இரட்டைச் சகோதரிகளின் உருவ ஒற்றுமை போலவே மதிப்பெண்ணிலும் கிட்டத்தட்ட ஒற்றுமையான மதிப்பெண்களைப் பெற்ற நிகழ்வு இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.