தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சிவசங்கரி. புளியம்பட்டி, சீவலராயனேந்தல், பாரதிநகர், தாமஸ்நகர், இலவன்குளம், முரிப்பன்குளம், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளை அடக்கிய பெரிய பஞ்சாயத்து ஆகும்.இந்த பஞ்சாயத்திற்குட்பட அனைத்து பகுதிகளுக்குமே அரசு கொடுத்த நிதியை முறையாக பிரித்து சாலை,  வடிகால், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி செய்து வருகிறார். மேலும் எந்நேரமும் கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவியை அணுகி தங்களுடைய  குறைகளை கூறினால்  அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் விரைந்து சென்றடைவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி.

பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி

இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி முறைகேட்டில் ஈடுபட்டு வருதாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர், முதலைமைச்சர் தனிப்பிரிவு, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.அதனை விசாரணை செய்த அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவி மீது குற்றம்சாட்டப்பட்ட புகாரில் உண்மை எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.அதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவிக்கு எதிராக வட்டார வளர்ச்சி அலுவலத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல்துறை, மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர்.

உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு

உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அதையும் மீறி உண்ணாவிரதம் இருக்க ஒரு சில வார்டு உறுப்பினர்கள் வருவார்கள் எனவும் வந்தால் கைது செய்ய காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் இருந்தனர்.ஆனால் உண்ணாவிரதம் அறிவித்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வராததால் காவல்துறையினர் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலத்தின் முன்பு முன்னேற்பாடாக காவலர்கள் குவிப்பு

எனவே பஞ்சாயத்து தலைவி மீது வார்டு உறுப்பினர் வைத்த குற்றசாட்டுகள் உண்மை எனில் அதனை நிருபிக்க வார்டு உறுப்பினர்கள் முடியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தான் உண்ணாவிரதம் இருக்க வரவில்லை என்கின்றனர். பெண் பஞ்சாயத்து தலைவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து வரக்கூடிய நிலையில் அதனை தடுப்பதற்கான முயற்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக பஞ்சயத்து தலைவி சார்பில் கூறப்படுகிறது.