குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று (ஜுலை-11) கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்

 நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவ்வப்போது முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்தும் அவதூறாக பேசி கைதாகுவது வழக்கம். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குமரியில் இருக்கும் மலைகளை குடைந்து கிரானைட் எடுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்தார். இயற்கை வளங்களை தமிழ்நாடு அரசு காக்க தவறிவிட்டதாக அவர் விமர்சனம் வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி அவர் கைது செய்யப்பட்டார்.

சீமானுடன் சாட்டை துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி மேடையில் முதல்வர் ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாக அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் சாட்டை துரைமுருகன் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில்தான் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகனை குளிக்கவிடாமல் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாட்ட துரைைமுருகன்

அதன்படி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பாக போட்டியிடும் அபிராமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

சாட்டை துரைமுருகன்

இதையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு எதிராக திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதில் வழக்கு பதியப்பட்டு குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.