மதுரை போலீஸ் கமிஷனரின் வாக்கி டாக்கி ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. என்ன காரணம்?
சமீபத்தில், மதுரை பரவை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு ஆய்வாளரான தவமணி என்பவர், பூ விவசாயி ஒருவரை ஆபாசமாக பேசியிருந்தார்.. இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது..
இதை பார்த்த பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதையடுத்து தவமணியை பணியிடை நீக்கம் செய்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன், தவமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.. காவல்துறை: இதையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திடீரென கட்டுப்பாட்டறைக்கு வாக்கி டாக்கி மூலம் அனைத்து காவல்துறையினரிடமும் பேசினார்.. அந்த ஆடியோ பேச்சுதான், இணையத்தில் வெளியாகி பெருத்த கவனத்தை ஈர்த்து வருகிறது..
மதுரை மாநகர காவல் காவல்துறையினரிடம் கமிஷனர் லோகநாதன் வாக்கி-டாக்கி மூலம் பேசியதாவது: “ஒரு செக் போஸ்டில் நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளோம். இப்போது எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது.. 24 மணி நேரமும் கண்விழித்து கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம். உரத்த குரல்: ஆனால், ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன் வரும் மக்களிடமும், வாகன சோதனையின்போதும் சட்டப்படி எது சரியானதோ அது குறித்து சொல்லும் விதம் உள்ளது. உரத்த குரலில் கத்திதான் சொல்ல வேண்டும் என்றோ, ஆபாசமான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்றோ கிடையாது. சட்டப்படி செய்ய வேண்டியதை நாம் செய்யத்தான் போகிறோம்.
போலீசார் அனைவரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்… இதை எச்சரிக்கையாகவும், அறிவுறுத்தலாகவும் சொல்கிறேன்.. தேவையற்ற வார்த்தைகளை பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டென கோபப்படும் காவலர்கள் குறித்து மாநகர துணை ஆணையர் மற்றும் உளவுத்துறை மூலம் கண்காணித்து அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். வாக்கி டாக்கி: மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தேவையில்லாமல் பேசக்கூடிய (ஷார்ட் டெம்பர்) போலீசார் குறித்த விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம். அதுபோன்ற போலீசாரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதனையும் மீறி தேவையற்ற வார்த்தைகளை பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தற்போது நடந்துள்ள சம்பவமே உதாரணம்” கமிஷனர் வாக்கி டாக்கியில் பேசியுள்ளார்.
வாக்கி டாக்கி: மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தேவையில்லாமல் பேசக்கூடிய (ஷார்ட் டெம்பர்) போலீசார் குறித்த விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம். அதுபோன்ற போலீசாரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதனையும் மீறி தேவையற்ற வார்த்தைகளை பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தற்போது நடந்துள்ள சம்பவமே உதாரணம்” கமிஷனர் வாக்கி டாக்கியில் பேசியுள்ளார்
previous article
வேலூர், திருச்சி, திருப்பூரில் வக்பு சொத்துக்கள் அபகரிப்பு அதிகம்.. வக்பு சட்டத்தில் திருத்தம்.. மத்திய அரசு முடிவு..
next article
‘ஹர் கர் திரங்கா’ காலர் டியூன் சொல்லும் செய்தி என்ன?
you might also like
வங்கி ஊழியரின் காதை வெட்டிய மர்மநபர்.. காது வெட்டுக்கான காரணம் என்ன?
December 19, 2024