தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஜுலை-11) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் 21ம் தேதி ஆடித்தபசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவில் இலட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர்கள்

இத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து நகராட்சியில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் உத்திரப்பிரேதேசம் கோவில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தது போல் நம்முடைய  ஆடித்தபசு திருவிழாவில் நடந்துவிடக்கூடாது என நம்முடைய முதல்வரும் விரும்புறாங்க என பேசியதால் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற சுபகாரியங்களின் போது இப்படி அபசகுணமாக எம்பி பேசுகிறாரே என சிலர் சலிப்படைந்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் திமுக உட்கட்சி பூசலால் ஆடித்தபசு நகராட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முதன் முதலாக எம்பி கலந்து கொண்டுள்ளார். அதனால் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ராஜா இந்த கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.