திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், துங்காவி ஊராட்சியில் உள்ள அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (பிப்-06) பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வநாயகி முன்னிலையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் மனித உடல் செயல்பாடுகள், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல், இயந்திரவியல், சுற்றுச்சூழல், காற்றாலை மின்சாரம், விவசாயம், கால்நடைவளர்ப்பு சரிவிகித உணவு, பாராம்பரிய சிறுதானிய உணவின் பயன்கள், சாலை பாதுகாப்பு விதிகள், நிலத்தடி நீர் மற்றும் நீர் மேலாண்மை, இயற்கை எரிவாயு, நீர் சுத்தீகரிப்பு, மாடித்தோட்டம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான படைப்புகளை மாணவ மாணவியர்கள் ஆர்வத்தோடு காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவுபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பங்கேற்று மாணவர்கள் தயாரித்திருந்த அறிவியல் படைப்புக்களைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். அதோடு, அவைகளின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களே தங்களின் பிஞ்சுக் குரலில் தமிழிழும், ஆங்கிலத்திலும் விளக்கமளித்தனர்.
இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளால் மாணவர்களின் தனித்துவமான அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகள் அல்லது சோதனைகளை கொண்டு வர ஊக்குவிக்கின்றன. பொருட்களை உடல்ரீதியாக கையாளுதல், தரவு சேகரிப்பு மற்றும் விளைவுகளை கவனிப்பதன் மூலம், மாணவர்கள் அறிவியலின் நடைமுறை பயன்பாடுகளுக்கு ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக் கொள்கிறார்கள், இறுதியில் இது அவர்களின் அறிவை வலுப்படுத்துகிறது மற்றும் ஆய்வு செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது, உற்சாகப்படுத்துகிறது மற்றும் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது.
ஆக்கவும் முடியும் – அழிக்கவும் முடியும் என்ற வல்லமை அறிவியலுக்கு மட்டுமே உள்ளது!