தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம்  உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ  வாகனங்கள் மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி

இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2  நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி வழித்தட துவக்க விழா  சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் (கூ.பொ.) மரு. இரா. ரிச்சர்டுராஜ் வரவேற்புறை ஆற்றினார்.   தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் உயர்திரு. ஏ.கே. கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்று தென்காசி பராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. திருமதி. டாக்டர்.  ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஈ. ராஜா மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. மரு. தி. சதன் திருமலைக்குமார், அவர்கள் முன்னிலையில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி வழித்தட சேவை துவக்க விழா நடைபெற்றது. 

கால்நடைக்கு சிகிச்சை அளிக்கின்றனர்

திருமதி. தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர்,  தென்காசி,  திரு. லாலா. பெ. சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திருமதி. உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர்,  திருமதி. விஜயலெட்சுமி கனகராஜ்,  குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,  திருமதி. மாதவி முத்துராஜ், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,  திரு, T.R. உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர், தென்காசி, திருமதி. கோ. செல்வி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், திரு. K. கண்ணன் (எ) ராஜீ, சங்கரன்கோவில் நகர்மன்றத் துணைத்தலைவர்,   திருமதி. முருகேஸ்வரி கோட்டியப்பன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்,   திரு. ரா. பாரதி கண்ணன், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

கால்நடைக்கு சிகிச்சை அளிக்கின்றனர்

உதவி இயக்குநர்கள் மரு, மு. மகேஷ்வரி,  மரு. திருநாவுக்கரசு,   மரு. ரஹ்மத்தூல்லா, மரு. G. முருகன், 1962 கால்நடை அவசர ஊர்தி கால்நடை மருத்துவர் மரு.சந்திரசேகர்,  கால்நடை உதவி மருத்துவர்கள்            மரு. S. அந்தோணிராஜ்,   மரு. சி. நாகராஜன் மற்றும் மரு. மா. வசந்தா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவாக கால்நடை பராமரிப்புத்துறை  உதவி இயக்குநர் மரு. சு. சுமதி, அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். 

கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி

இன்று முதல் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி மூலம் சங்கரன்கோவில் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சைப்பணி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் அனைத்து வகையான சிகிச்சைப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தெரிவிக்கப்படுகிறது