பீஸ்ட், கோலமாவு கோகிலா, ஜெய்லர் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதாவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா, அளித்துள்ள பழைய பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு விபத்துதான், என் நண்பர் ஒருவரை டிராப் பண்ணுவதற்காகத்தான் நான் போனேன். ஆனால், போன இடத்தில், நீ நடிக்கலாமே என்று கேட்டார்கள். எனக்கு நடிப்பு வராது, ஆனால், கத்துக்கிட்டு நடிக்கிறேன் என்று சொன்னேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி.
பயங்கரமா அழுவேன்:
என் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனை இருந்தது, வேறு எதாவது செய்யலாம் என்ற எண்ணம் இருந்ததால், நடிக்க வந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால், அதைவிட பல சினிமாவில் பல கஷ்டத்தை அனுபவித்தேன். முதலில் எனக்கு நடிக்க தெரியாததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் என்னைப்பார்த்து சிரித்தார்கள். நைட் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுவேன்.
அட்ஜெஸ்ட்மெண்ட்:
சினிமாவில் நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க, அவங்கள் யார் என்று தெரிந்து கொண்டு, அவர்களை கடந்து செல்வதுதான் சவாலாக இருக்கும். அதே போல, சினிமாவில் ஒரு பெண் நல்ல இடத்திற்கு வந்துவிட்டால், அவள், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் இந்த இடத்திற்கு வந்தாள் என்று தான் சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கும். ஒரு பெண் தன் திறமையால் இந்த இடத்திற்கு வந்தாள் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.
நிறைய ஏமாற்றம்:
என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் என பல விஷயம் நடந்து இருக்கு அதை எல்லாம் கடந்து வந்த இருக்கிறேன். மேலும், எனக்கு 96 திரைப்படம் ரொம்ப பிடிக்கும், அதே போல மறுவார்த்தை பேசாதே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், அப்படி ரெடின் கிங்ஸ்லி என்னை உருகி உருகி காதலித்தார் இப்படி காதலித்தால் யாருக்குத்தான் பிடிக்காது என்று நடிகை சங்கீதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.