சென்னையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார் .வயது முதிர்ந்தோர் , மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைக்க உள்ளார்.
தாயுமானவர் திட்டம் இன்று தொடக்கம்
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நம்முடைய திராவிட மாடம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திட்டு இருக்குறோம். அந்த வரிசையில என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டமா உருவாகி இருக்கின்ற தாயுமானவர் திட்டம்.இது கூட்டுறவுத்துறை சார்புள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்களை வழங்குகின்ற திட்டமாகும்.தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசோட சேவைகளை மக்களுடைய வீடுகளுக்கே தேடிச்சென்று கொடுக்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி ஒரு திட்டத்தை திராவிட மாடல் அரசு அறிவிக்கிறது. நாம நினைக்கிறது இல்ல அந்த திட்டத்தோட பலன் பயன் கடை கோடி மனிதனையும் சென்று சேர்ந்த கண்காணிக்கிறதையும் கடமையாக நினைக்கிறேன்.
இனி வீடுகளுக்கே வருன் ரேஷன் பொருட்கள்
அப்படியே வயது முதிர்ந்தோறும் மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு போய் பொருட்களை வாங்குவதில் ஏற்படுகின்ற சிரமத்தை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கோம். தொடர்ந்துபேசிய முதல்வர் இந்த திட்டத்தை 34 ஆயிரத்து 89 நியாய விலைக் கடைகளில்( 34,809) செயல்படுத்த போறோம்.மேலும் 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் ஒரு லட்சத்து 27,797 மாற்றுத்திறனாளிகள் 21 லட்சத்தி 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தால பயனடைய உள்ளனர்.இதனையடுத்து ,ஒவ்வொரு மாசமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துடும். இதுக்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போன்ற செலவு 30 கோடியே 16 லட்சம் ரூபாய் ஆகும். இது, கூடுதல் சிறப்பாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர்காக்கு கடமையா நாங்க நினைக்கிறோம் என்று கூறினார்.
30 கோடியே 16 லட்சம் ரூபாய் மதீப்பீடு திட்டம்
மேலும் இது கூட்டுறவுத்துறை விட மிகப்பெரிய சேவை அந்த துறை அதிகாரிகள் கடை செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. தமிழ்நாடு முழுக்க 37 ஆயிரத்து 328 நியாய விலை கடைகள் இருக்கின்றது.இதில், கடந்த நான்கு ஆண்டுகள் மட்டும் 394 புதிய நியாய விலை கடைகளை திறந்து இருக்கிறோம்.தலைவர் கலைஞர் வழியில் இந்த நியாய விலை கடைகளில் கிடைப்பதில் நாம முறையா சிறப்பாக நடத்துவதால் தான் தமிழ்நாடு இன்னைக்கு பட்டினச் சாவி இல்லாத மாநிலமாக இருக்கிறது. இந்த ரேஷன் கடையோட பயன்பாட்ட இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்.இந்த நேரத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தோடு நோக்கம் 100 விழுக்காடு நிறைவேற்கிற வகையில உங்களுடைய பணி அமையனும் உங்களை எதிர்பார்த்த காத்திருக்கிற முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர்கிற வகையில் நீங்க கனிவா நடந்துக்கணும் நீங்க வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு என்று தெரிவித்து உள்ளார்.