பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், மதுரை திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பயணிகள் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டல்களில் உணவுக்காகவும், சிற்றுண்டி மற்றும் இன்னபிற தேவைகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், கலப்பட டீ தூள் பயன்படுத்தி டீ, காபி போன்றவைகள் தயார் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இங்கு விற்கும் திண்பண்டங்கள் எம்ஆர்பி விலையை விட கூடுதலாகவும் அநியாய விலைக்கும் விற்கின்றனர். இதை யாராவது தட்டிக்கேட்டால் ஒருமையில் பேசுகின்றனர் என்கின்றனர்.
கொஞ்சம் கூட சுகாதாரமின்ற உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தரமற்ற எண்ணெய்யை பயன்படுத்தி போன்டா, பஜ்ஜி மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு டீ குடிக்க வரும் பொதுமக்கள் டீ கப்புகளை போடுவதற்கென்று தனியாக குப்பைத் தொட்டிகளை அமைக்காததால் பயணிகள் டீ குடித்துவிட்டு ரோட்டிலேயே வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதோடு சாலையே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இதைவிட அயோக்கியத்தனம் என்னவென்றால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற லாஹரி பொருட்களையும் சட்டவிரோதமாக விற்கின்றனர்.
இங்கு ஒரே நபர் பல்வேறு பெயர்களில் கடையை நடத்தி வருவதால் எல்லா ஹோட்டல்களிலும் அநியாய விலைதான் என்கிறார்கள். பயணிகள் வேறு வழியின்றி அதிக விலைக்கு உணவுகளை வாங்க வேண்டி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு இங்கு நடக்கும் அவலம், அநியாயம் எல்லாம் தெரியுமா இல்லையா?
எனவே இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஐஏஎஸ் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதை பாக்கு, புகையிழை வகைகளை விற்றுவருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்படி ஹோட்டல்களில் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர், உணவு வகைகள் கிடைக்கவும் அதோடு எம்ஆர்பி விலைக்கு பொருட்களை விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குறைகளை முறையாக கண்காணிக்காத உணவு பாதுகாப்பு துறையினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
சாட்டையை சுழற்றுவாரா மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஐஏஎஸ் ?