தமிழகம் முழுவதும் நாளை 2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகளவு பயணிகள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். தென் மாவட்டங்களுக்கு போதிய கூடுதல் சிறப்பு பேருந்து வசதி இல்லாததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் கால்கடுக்க காத்திருந்தனர். இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அதிகளவு கூட்டம் இருந்ததால் மேற்கொண்டு பயணிகளை ஏற்ற முடியாமல் போனது.இதனால் கொதிப்படைந்த பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்தபின்னர் மறியலை கைவிட்டனர்.

இதுபோன்ற முக்கியமான நேரங்களில் போக்குவரத்து கழகம் துரிதமான முன்னேற்பாடுகளை செய்து பயணிகள் அவதியுறாமல் இருக்க கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கவேண்டும்