தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் கல்லார் வரை சென்று பாதியிலேயே திரும்பியது. இதனால் மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேதுறை அறிவிப்பு செய்துள்ளது.