திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி குணராஜ் தாமோதரனுக்கு செந்தமான தெண்ணந் தோப்பை, தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் தா.சு.அஸ்வின், உ.டார்வின், சு.கு.திவாகர், சி.ஹரிஹரன், ஜா.ஜிம்சன் வெஸ்லி, நா.பிரவின், இரா.சஞ்சய், இரா.சுஜித் குமார், அ.சுகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

நுண்ணூட்டச்சத்தினை பெருக்க அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் அகியவற்றை பொருத்தமான விகிதத்தில் கலந்து பயன்படுத்திக் காட்டினர். அதோடு மண் வளத்தைப் பெருக்க நுண்ணூட்டச்சத்து மிக மிக அவசியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.