திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை–பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜாவூர் பிரிவு பஞ்சாபி தாபா ஓட்டல் அருகில் மகாத்மா காந்தியைப் போல வேடமணிந்து உடல் முழுவதும் ஈயம் சாயம் பூசி வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிச்சை எடுக்கும் நபர் குறித்து விசாரிக்கையில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சில சமூக ஆர்வலர்கள் காந்தி போல வேடமணிந்து பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறினாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்

தேசப்பிதாவான மகாத்மா காந்தி வேடத்தில் பிச்சை எடுப்பது, அந்த புனிதரை அவமதிக்கும் செயலாக உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.