எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இருபது ஆண்டுகளுக்கு பின், பாராளுமன்றத்தில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.