கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகைச்சுவை நடிகர் கிங்காங் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 

அருண்மொழிதேவன் பேசும்போது கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று வரை அது வாக்குறுதியாக மட்டுமே உள்ளது எனவும்  மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக சொன்னதை எதுவும் செய்யவில்லை எனவும் புரட்சித்தலைவர் மற்றும் அம்மாவுடைய சாதனைகள் மற்றும் எடப்பாடியாருடைய சாதனைகளை விடிய விடிய பேசிக்கொண்டு இருக்கலாம் ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் வேதனைகளை அனுபவித்து கொண்டுள்ளனர்.  

விலைவாசிகள் உயர்ந்துள்ளது தமிழக முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிக் கொண்டுள்ளது பள்ளிக்கூடங்கள் அருகிலேயே கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டுள்ளது எடப்பாடியார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டோடு இருந்தது கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டுமென மக்கள் வீதியில் இறங்கி போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதே இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை  எடுத்துக்காட்டுவதாக பேசினார்.

மேலும் இந்த ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு என நடைபெறுவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளதாக பேசினார் நிகழ்ச்சியின் நிறைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.