பலியான மாதன்

நீலகிரி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பாடி பகுதியில் வளர்ப்பு யானை தாக்கியதில் மாதன் (75) என்பவர் இறந்தார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் படி, இறந்த மாதனின் இறுதி சடங்கிற்கு அவரின் குடும்பத்தாரிடம் உடனடியாக ரூ.25 ஆயிரமும் 4.75 இலட்சம் காசோலையும் என வனத்துறை சார்பில் மொத்தமாக 5 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் C.வித்யா வழங்கினார். தெப்பக்காடு வனச்சரக அலுவலர் மனோஜ் குமார், முதுமலை வனச்சரக அலுவலர் மேகலா ஆகியோர் உடன் இருந்தனர். இறந்த மாதன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

-கே.தமிழகம் சேட்