திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் வஞ்சிபுரம் அடுத்துள்ள வாய்க்கால் பாலம் அருகே தற்போது சுமார் இரவு 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்துக்குள்ளாகினர். அதிக காயங்களுடன் படுத்தவாறே கிடந்தனர்.இதையடுத்து, அவசர உதவிக்காக சுமார் ஐந்து ஆம்புலன்ஸ்கள் கணியூர், காரத்தொழுவு பகுதியிலிருந்து வரிசைகட்டி போட்டிபோட்டுக்கொண்டு வந்தது. அதிக சைரன் சத்தத்தோடு புயல் வேகத்தில் வந்த ஆம்புலஸ்களால் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். 

ஆகவே விபத்துக்குள்ளானவர்களை முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்த பின்னர் சைரன் ஒலியை குறைக்க வேண்டும். விபத்துக்குள்ளானர்கள் ஏற்கெனவே பதட்டத்தில் இருப்பார்கள் இதுபோன்ற அதிக ஒலி ஏற்படுத்தினால் மேலும் பதட்டமடையக்கூடும். 

விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்புமிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வேகத்தோடு விவேகத்தையும் பின்பற்ற வேண்டும்.