கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சார்பிலும், தாந்தோணி, மெட்ராத்தி, துங்காவி, காரத்தொழுவு, கடத்தூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, சோழமாதேவி, மைவாடி, பாப்பான்குளம், கொழுமம் ஆகிய ஊராட்சிகளின் சார்பிலும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் கே.ஈஸ்வரசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் P.S.தங்கராஜ் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.