திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன விலங்குகளான காட்டெருமை,யானை,காட்டுப் பன்றி,செந்நாய்,சிறுத்தை ஆகியவை சமீபகாலமாக வனப் பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்கள்,குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது இதனால் விவசாயிகளும்,பொது மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

சில நேரங்களில் மனித உயிர்களும் பலியாகி வருகிறது. இல் நிலையில் கொடைக்கானல் செண்பகனூர் பிரகாசபுரம் செல்லும் சாலையில் மர்ம விலங்கு தாக்கி கடமான் ஒன்று (சுமார் இரண்டு வயது பெண் மான்) மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது அவற்றின் பாகங்களை மர்ம விலங்கு எடுத்துச் சென்றுள்ளது.

இதையடுத்து அப் பகுதியிலிருந்த விவசாயி தனது தோட்டத்திற்கு செல்லும் போது மான் இறந்து கிடந்ததை பார்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த கடமானை பார்வையிட்டனர்.தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அங்குள்ள வனப் பகுதியில் இறந்த கடமானை வனத்துறையினர் புதைத்தனர்.

வனத்தை விட்டு ஊர்புறபகுதிகளுக்குள் நுழையும் வனவிலங்குகள்

இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கடமானை தாக்கிய மர்ம விலங்கு நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளனர். மேலும் வன விலங்குகளை குடியிருப்பு பகுதிகளிலும்,விவசாயப் பகுதிகளிலும் வர விடாமல் தடுப்பதற்கு வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் அகழி அமைக்க வேண்டும். வனத்துறையினரின் போதிய கண்காணிப்பும் அலட்சியமுமே வனவிலங்குகள் இறப்பிற்கு காரணம் என்கின்றர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமா?