கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்துக்கு, எடைக்கு எடை தங்கம் தந்தார், மூட்டை மூட்டையாய் சீர்வரிசை தந்தார், ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவப்பட்டது என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் கசிந்த நிலையில், இதற்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவும், கிங்காங் குறித்து கூறியிருக்கிறார். உழைப்பால் உயர்ந்த மனிதர் என்றும் பாராட்டியிருக்கிறார்.

King 24×7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, “தவக்களை என்ற நடிகர், பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் நடித்திருப்பார். அப்போது தவக்களைக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இந்த படத்துக்கு பிறகு 30 படங்களுக்கு மேல் புக் ஆயின. எல்லா தயாரிப்பாளர்களும் தவக்களைதான் கேட்டார்கள். சாப்பிட தூங்க நேரமில்லாமல் பிஸியாக இருந்தார்.
பிரபலம்” தவக்களை ரோல் மாடல் தவக்களை பார்த்துதான், சினிமாவுக்கு வந்ததாகவே கிங் காங் சொல்வார். இவரது இயற்பெயர் சங்கர் ஏழுமலை. வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். பிறகுதான் சினிமாவில் வாய்ப்பு தேடினார். கலைப்புலி சேகரன் கிங்காங்கை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். கிங்காங் என்றும் அவர்தான் பெயர் வைத்தார். கிங்காங்குக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பல இடங்களில் கிங்காங் போன்றோருக்கு கேரக்டர்கள் தேடி வந்தன. நன்றாக நடிப்பார், நன்றாக டான்ஸ் ஆடுவார்.. இதனால், தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார்.

உழைப்பால் உயர்ந்த கிங்காங் ஆனாலும், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கிங்காங் சென்று நடனமாடுவார். பிறகு ஒருகட்டத்தில், தானே அதுபோன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். இப்படி வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். 300 படங்களில் நடித்திருக்கிறார் என்றால், கலை நிகழ்ச்சிகளை 3000-க்கும் மேல நடத்தியிருக்கிறார். படங்களைவிட, இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் அதிகமாக சம்பாதித்தார். எனவே, நியாயமான வருமானத்தை சேமித்து, எம்ஜிஆர் நகரில் ஒரு வீடு வாங்கினார். பிகாம். எம்பிஏ வரை தன்னுடைய மூத்த மகள் கீர்த்தனாவை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என தேடி தேடி சென்று பத்திரிகை தந்தார். இவர் பத்திரிகை தந்து கொண்டிருக்கும்போதே, பலவிதமான ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. போண்டாமணி நூற்றுக்கணக்கான பிரபலங்களுக்கு பத்திரிகை வைத்தும்கூட, பெரிதாக யாரும் வரவில்லை. விஷால் வந்ததாக சொல்கிறார்கள். கிங்காங் உள்ளிட்டோரை குறிப்பிட்ட வேடங்களுக்கு, அதுவும் அவர்கள் அந்த கேரக்டருக்கு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்துவார்கள். பிந்துகோஷ், போண்டாமணி, குண்டு கல்யாணம், பகோடா காதர், உசிலைமணி என்னத்த கண்ணையா, குமரிமுத்து, கல்லாப்பட்டி சிங்காரம், போன்ற நடிகர்களை, எக்ஸ்க்ளுசிவ்வாக படங்களில் பயன்படுத்துவார்கள்.
ஆனால், அதற்கு பிறகு, இவர்கள் யாரையுமே, சினிமாவில் கண்டுகொள்ளவில்லை. ஒருத்தரும் இவர்களை நினைக்கவுமில்லை, உதவி செய்யவுமில்லை.. குறைவான வாய்ப்புகள் வரும் என்பதால், பொருளாதார சிக்கலும் சேர்ந்தே எழும். பிந்துகோஷ் பரிதாபம் பிந்துகோஷ், உசிலைமணி உட்பட இவர்கள் இறந்தபோதும், சினிமாக்காரர்கள் யாருமே செல்லவில்லை. கடைநிலைமையிலிருந்து வந்த நடிகர், தன்னுடைய மகளை அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்குமே பத்திரிகையை தந்தார்.
பெரிய நடிகர்கள் வந்திருக்கலாம். காசு பணம்கூட தராமல், கிங்காங் மகளை வாழ்த்தியிருக்கலாம். யாருமே வராமல் போய்விட்டதால், கிங்காங்கை சிலர் டிரோல் செய்ய துவங்கினார்கள். அப்போதுதான், முதலமைச்சர் ஸ்டாலின், கிங்காங் வீட்டு திருமணத்துக்கு வந்துவிட்டார். முதல்வரே வந்துவிட்டதால், யாராலும் அதற்கு மேல் இதை பற்றி பேசமுடியவில்லை. சினிமா துறையிலுள்ளவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. எடைக்கு எடை தங்கம் எடைக்கு எடை தங்கத்தை தன்னுடைய மகளுக்கு கிங்காங் தந்ததாக அடுத்த கிண்டல் கிளம்பியது. இதென்ன நயன்தாரா திருமணமா? அம்பானி வீட்டு கல்யாணமா? கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்தவர் கிங்காங். எளிய மனிதர். இந்த திருமணத்தை நடத்த அவர் பட்ட பாடு, வேதனை, அவமானங்கள் இதெல்லாம் எவ்வளவு என்று கிங்காங்கிடமே கேளுங்கள்…
அதைவிட்டுவிட்டு, புரளியை கிளப்புவது தவறானது, கண்டிக்கத்தக்கது. அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போகிறவர்களுக்கு கிங்காங் வீட்டு கல்யாணத்துக்கு வரத்தெரியவில்லை. ரஜினி 2 கோடி கிஃப்ட் வாங்கிட்டு வருகிறார். அரசியலுக்கு வந்துவிட்டதால், தவெக தலைவர் விஜய், உயிரிழந்த சிவகங்கை அஜித்குமார் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லியிருக்கிறார். ஆனால், விஜய்யை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களின் மறைவுக்கு சென்றிருக்கிறாரா? என்றெல்லாம் கிங்காங்கிற்கு ஆதரவாக கேள்வி கேட்டுள்ளார்.





