ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சியானது கடந்த 03-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளநிலை முதலாமாண்டு மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வழிகாட்டுதல் பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மக்களவை உறுப்பினர் கே.இ.பிரகாஷ் கலந்து கொண்டு மாணவர்களின் மத்தியில் எழுச்சியுடன் சிறப்புரையாற்றினார். நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமை பெண் உள்ளிட்ட தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்டும் அதன் பயன்களையும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் உற்சாகத்தோடு பேசினார். மேலும் இடைவிடா கற்றலே வாழ்வில் முன்னேற சிறந்த வழி எனவும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க கல்வி ஒன்றே வெற்றிக்கான சாவி என்பதையும் மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்தார். “உழைப்பே உயர்வு” என்பதை ஒவ்வொரு நாளும் பின்பற்றுங்கள் வெற்றி உங்கள் வசம் தான் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினாா்

இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் K.கே.அருள்மொழி மருத்துவ அலுவலர் A.ஹேமலதா சமூக ஆர்வலர் D.சங்கீதா மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஈரோடு V.ராஜேஸ்வரன் சுகாதார ஆய்வாளர் மொடக்குறிச்சி N.ஜீவானந்தன் சுகாதார ஆய்வாளர் அவல்பூந்துறை ரா.சம்பந்தம் சுகாதார ஆய்வாளர் அரச்சலூர் மற்றும் எம்.தேவராஜன் சுகாதார ஆய்வாளர் அரச்சலூர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வழிகாட்டுதல் பயிற்சியில் முனைவர் க.மூ.சபிதா அனைவரையும் வரவேற்றார், முனைவர் மு.தர்மலிங்கம் அறிமுக உரையாற்றினார். முனைவர் அ.நல்லசிவம் நன்றியுரை வழங்கினார். மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.தர்மலிங்கம் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.