கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ 54 லட்சம் மதிப்பிலான 311 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, இணையதள மோசடிகளில் பறிகொடுக்கப்பட்ட தொகையான ரூ.1 கோடியே 7 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (27.01.2024) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர் ஐபிஎஸ் மீட்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.