கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் மறைந்த ரங்கராஜின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினர் மற்றும் காவலர்களுடன் சேர்ந்து தானும் அவரின் உடலை தூக்கினார். இச்சம்பவம் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.