தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் விதமாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‘கடத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் தொகுப்பை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலவேணி கலையரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட மாவட்ட கழக பிரதிநிதியுமான கு.கலையரசு, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா செந்தில்குமார், கனி சாம்புகன், ஊராட்சி செயலாளர் அறிவுத்தம்பி , மக்கள் நல பணியாளர் ஜாகிர் உசேன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்