அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

article_image3
எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி எப்போது பொறுப்பேற்றாரோ அன்று முதல் அக்கட்சியில் தொடர்ந்து குழப்பம் மற்றும் சலசலப்பு பஞ்சமில்லை. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது என தெரிவித்தார்.

article_image2
சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுகவில் உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

ஓபிஎஸ்-ஈபிஎஸ்

இந்த தடையை நீக்கக்கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கி உத்தரவிட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

article_image4
தேர்தல் ஆணையம்

இந்த சூழலில் தான் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சூர்யமூர்த்தி என்பவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவர் தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது. மேலும் பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் குறித்து எந்த விவகாரத்தையும் சூர்ய மூர்த்தி கேள்வியை எழுப்ப முடியாது.

தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை

சூர்ய மூர்த்தி போன்ற கட்சிக்கு விரோதமானவர்கள் புறவாசல் மூலம் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும். தவிர, உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடியாது. எனவே உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணை வரம்புக்குள்ளும் வராது. எனவே சூர்ய மூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.