மத்திய பிரதேசம் மார்க்கெட்டில் நடக்கும் சமாச்சாரம்தான், தற்போது வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றன.. தாடிச்சா என்றால் என்ன? என்ன நடக்கிறது ஷிவ்புரி கிராமத்தில்? என்ற ஆர்வமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.. அதேசமயம், வடமாநிலங்களில் இன்னும்கூட கிராம பஞ்சாயத்துக்கள்தான், குடும்ப விவகாரங்களில் தலையிட்டு தீர்ப்புகளை சொல்லி வருகிறார்கள். இதில் பெரும்பாலும், பாதிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

மாதிரி புகைப்படம்

இதற்கு நடுவில், இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளாலும், ஒருசில பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்களாலும் பாதிக்கப்படுவதும் பெண்களாகவே இருக்கிறார்கள். மேலும் பழங்குடி மக்களிடம் பின்பற்றப்படும் விநோத பழக்கவழக்கங்களிலும் பெண்களின் அதிகாரமும், பலமும் குறைக்கப்பட்டிருப்பதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. திருமணத்திற்கு முன்பு பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் சட்டிஸ்கர் மாநிலத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.. அந்த மாநிலத்தில் அதிகமாக முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடியின மக்களிடையே இந்த விநோத பழக்கம் உள்ளது.

மாதிரி புகைப்படம்

தாடிச்சா: அதுபோலவே, மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி கிராமத்திலும் புதிய நடைமுறை ஒன்று உள்ளது.. இந்த பழக்கத்துக்கு தாடிச்சா “Dhadicha” என்று பெயர் சொல்கிறார்கள்.. அதாவது, இங்குள்ள பெண்கள், சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறார்களாம்.. மார்க்கெட்டில் பொருட்களை விலைக்கு வாங்குவதுபோல, பெண்களை விலைக்கு விற்பதும், அவர்களை விலைக்கு வாங்குவதும் இந்த மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

ஆனால், இந்த பெண்களை மொத்தமாக விலைக்கு வாங்காமல், வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்களாம். இந்த பெண்களை வாடகைக்கு வாங்குவதற்காகவே, பலரும் ஆர்வத்துடன், வெகுதொலைவில் இருந்து இந்த சந்தைக்கு வருகிறார்களாம். வாடகைக்கு பெண்கள்: எந்த பெண்ணுக்குமே, ஒரு முறையான ஒப்பந்தம் வரைவு செய்யப்படுகிறது. குறைந்தது 15,000 ரூபாயிலிருந்து, சிலபல லட்சங்கள் வரை பெண்கள் விலைக்கு விற்கப்படுகிறார்கள்.. இதில், கன்னிப் பெண்களுக்குதான் நிறைய கிராக்கி இருக்கிறதாம். ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு மட்டுமே வாடகைக்கு அழைத்து செல்லலாம்.

மாதிரி புகைப்படம்

அதாவது, விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் 10 ரூபாய்க்கு குறைவான விலையில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அனைத்து பெண்களுக்கு வாடகை ஒப்பந்தம்தான் போடப்படுகிறது.. மார்க்கெட்டில் வரிசையாக உள்ள பெண்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்த பெண்ணுக்கு விலையையும் நிர்ணயம் செய்து, அதற்குரிய பணத்தையும் செலுத்திவிட்டு, அப்பெண்ணை தங்களுடன் அழைத்து சென்றுவிடுகிறார்கள்.

மாதிரி புகைப்படம்

என்ன காரணம்: இப்படி வாடகைக்கு பெண்களை வாங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. வீட்டு வேலைக்கு இப்பெண்களை ஆண்கள் விலைக்கு வாங்கி செல்வார்கள். அல்லது தங்கள் வீடுகளிலுள்ள வயதானவர்களுக்கு சேவை செய்ய விலைக்கு வாங்குகிறார்கள். சிலர் தங்களுக்கு இன்னும் மணமகள் கிடைக்காததால், அதுவரை இப்பெண்களை வாடகைக்கு தங்களுடன் அழைத்து செல்கிறார்கள். பெண்களை விலைக்கு வாங்குவதற்கு இப்படி ஆண்களுக்கு நிறைய காரணம் இருக்கின்றன.ஆனால், சந்தையில் விலைபோவதற்கு வறுமை தவிர பெண்களுக்கு வேறு எந்த காரணமும் இல்லை. “கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது இளமையில் வறுமை”..