வடமாநிலங்களில் 22 குழந்தைகள் பலியானது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நிறுவனத்தை முறையாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகளும் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தயாரித்த இருமல் மருந்து விஷமானது எப்படி? வியாபாரிகள் விற்ற ‘ப்ராபிலீன் கிளைகால்’ சேரமத்தில் டை எத்திலீன் கிளைகால் கலப்படமானது தான் காரணம் எனறு கூறப்படுகிறது.

கோல்ட்ரிஃப்’ மருந்தை மாநில அரசு தடை செய்தது.

விரிவாக பார்ப்போம். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த இருமல் மருந்தின் பெயர் ‘கோல்ட்ரிப்’ ஆகும். இந்த மருந்து ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இருக்கிறது. பல குழந்தைகள் உயிர் போக காரணமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மீது மத்தியபிரதேச மாநில தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வழக்கில் ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்யவும், நிறுவனத்தில் வந்து கலப்படம் குறித்து விசாரிக்கவும், மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து டிஎஸ்பி பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகோட்டின் மேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தார்கள். பின்னர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா மருந்து கம்பெனியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

மருந்து நிறுவனத்தின் அதிகாரிகள் ஜெயராமன், மகேஸ்வரி ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (வயது 75) குறித்து விசாரித்தனர். ரங்கநாதன் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் வசித்து வந்தது மத்திய பிரதேச போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை கோடம்பாக்கம் போலீசாரின் உதவியுடன் ரங்கநாதன் வீட்டுக்கு மத்தியபிரதேச தனிப்படை போலீசார் சென்றார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதுடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருந்து நிறுவனத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். மேலும் மருந்து நிறுவன அதிகாரிகள் ஜெயராமன், மகேஸ்வரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை மத்திய பிரதேசம் அழைத்து செல்ல உள்ளார்கள்.

ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன்

இந்நிலையில் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள் என்பது விசாரைணயில் தெரியவந்துள்ளது மேலும் இந்த மருந்தில் விஷத்தன்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை முறையாக ஆய்வு செய்யாத 2 மூத்த மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது டை எத்திலீன் கிளைகால் காரணம் இதனிடையே காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து எப்படி குழந்தைகளுக்கு விஷமாக மாறியது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த தகவல்களை பார்ப்போம்.

பல குழந்தைகள் இறக்க காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கலப்பட மருந்து டை எத்திலீன் கிளைகால் தான் குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருப்பது உறுதியாகி உள்ளது. டை எத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை தொழில்துறையில் கரைப்பான் மற்றும் பனி உறைக்கும் ரசாயனங்களாக பயன்படுத்தப்படுபவை ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையின்படி, மிகக் குறைந்த அளவில் இதை உட்கொண்டால் கூட சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். குழந்தைகளின் உயிருக்கு இது மிக ஆபத்தானது. ப்ராபிலீன் கிளைகால் இதனை எப்படி மருந்தில் சேர்த்தார்கள்.. இதனை அவர்கள் மருந்தில் சேர்க்கவில்லை. மாறாக இருமல் மருந்துகள் தயாரிக்க பொதுவாகவே ‘ப்ராபிலீன் கிளைகால்’ என்ற செயலற்ற சேர்மம் சேர்க்கப்படும். ஆனால் இதனை விற்ற வியாபாரிகள், அதனுடன் டை எத்திலீன் கிளைகாலை கலக்கி உள்ளார்கள். அந்த கலப்படம் நிறைந்த ‘ப்ராபிலீன் கிளைகால்’ சேர்மத்தை வாங்கி சளி மருந்து தயாரித்து உள்ளனர். இதனால் சளி மருந்தில் டை எத்திலீன் கிளைகால் அளவு அனுமதிக்கப்படும் 0.1 சதவீதத்திற்கு பதிலாக 46 சதவீதமாக இருந்தது.

இதுவே குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனிடையே 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.