கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எட்வர்ட்  கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 85−பேருக்கு இலவச சேலைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை,  நகர்மன்ற  துணைத் தலைவர் மாயக்கண்ணன், சி.எஸ்.ஐ தேவாலய போதகர்கள் ஜெகதீஸ் கிருபாகரன், ஜான்சன் மற்றும் தேவாலய சங்க செயலாளர் சார்லஸ் ஜேசுதாசன்,பொருளாளர் ராபின் மற்றும்  சி.எஸ்.ஐ. தேவாலய நிர்வாகிகளும், நகர்மன்ற உறுப்பினர் இருதயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.