கோவை வனக்கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக வனப் பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளது.
வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊட்டி சாலை கடந்து கல்லார், நடுத்திட்டு, நரிப்பள்ளம், மாம்பட்டி, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, தாசம்பாளையம், குரும்பனூர், சமயபுரம் மற்றும் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரியைக் கடந்து ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, லிங்காபுரம் பகுதியில் இருந்து தடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சில காட்டு யானைகள் செல்கின்றது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனப்பகுதியில் தமிழ்நாடு வனதுறையிடமிருந்து 99 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 500 ஏக்கர் நிலம் பெற்று வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வனக் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் இந்திய வனப்பணி அதிகாரிகளாகவும், வனசரக அலுவலர்களாகவும் இன்னும் பல்வேறு துறைகளின் முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வருவதும் இந்த வனக்கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. மேலும், இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். இந்த வனக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கே.டி.பார்த்திபன், இதே வனக்கல்லூரியில் மாணவராகப் பயின்று, பேராசிரியராக பணியாற்றி, கல்லூரி முதல்வராக உயர்ந்து கல்லூரிக்கும், வனத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கல்லூரியின் நுழைவாயில், காம்பவுண்ட் சுவர், உள் கட்டமைப்பு வசதிக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டன. கல்லூரி நுழைவயில் அருகே, புல் தரையில் பெரிய யானையின் பொம்மையும் வைக்கப்பட்டுள்ளது. யானைகள், சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட விலங்குகள் கோத்தகிரி வனச்சாலை, மலை அடிவாரச் சாலையைக் கடந்து செல்லும் சில நேரங்களில் வனக்கல்லூரி வழியாக கடந்து செல்லும். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இரவு, கோத்தகிரி சாலை வழியாக, பொதுமக்கள் அன்போடு அழைக்கப்படும் பாகுபலி என்ற ஆண் காட்டு யானை வனக்கல்லூரி நுழைவாயிலில் காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளியது. பிறகு உள்ளே நுழைந்து அருகே, புல் தரையில் வைத்திருந்த யானை பொம்மையையும் முட்டித் தள்ளியது
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் பல காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் உள்ளது. பாகுபலி என பெயர் வைத்து அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு ஆண் யானை பெரிய அளவில் பயிர் சேதம் ஏதும் செய்யாமல், பொதுமக்கள் யாரையும் தாக்காமல் இருந்து வருகிறது சார் என்றார்.
யானைகளுக்கு பிடித்தமான இந்த பகுதி பெரும்பாலும் காட்டு யானைகள் அதிக அளவில் கோத்தகிரி வனச்சாலையில் சென்று வருகிறது. சில நேரங்களில் வனக்கல்லூரி குடியிருப்பு காம்பவுண்டுக்குள் சென்று வரும். கடந்த ஆண்டு வனக்கல்லூரி அருகில் பெண் காட்டு யானை ஒன்று நல்ல முறையில் குட்டி ஈன்றுள்ளது இதன் பிறகு வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது…
ஆகையால் யானைகள் அதிகம் வந்து செல்லும் இந்த வனச்சாலையில் செயல்பட்டு வரும் வனக்கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் நலன், காட்டு யானைகள் மற்றும் வன உயிரினங்கள் நலனைக் கருதி வனக்கல்லூரி தங்கும் விடுதிகள், ஆடிட்டோரியம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களைத் தவிர தேவையில்லாத வனக்கல்லூரி பிளான்ட்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. பிளான்ட்டேஷன் அமைப்பதற்காக பல்வேறு நல்ல அரிய மர வகைகளை வெட்டியுள்ளனராம். இதுகுறித்து வனத்துறையும் கல்லைத்தின்டது போது கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். இடத்தை அகற்றி வனப்பரப்பை அதிகப்படுத்தி வனப்பகுதிக்குள் சேர்த்துக் கொண்டால் காட்டு யானைகள் மற்றும் வன உயிரினங்களுக்கு இடையூறின்றியும், பாதுகாப்புடனும் இருக்கும் என்கின்றனர்.
ஊட்டி சாலையில் காட்டு யானைகள் அதிகமாக சாலை கடந்து செல்கிறது. இது தொடர்பாக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகள் வந்துள்ளன. அதோடு, இந்த சாலையில் மனித வன உயிரினங்கள் மோதல் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள வனத்துறையிடம் தடையின்மைச்சான்று பெறவேண்டும்.வனப்பகுதி அருகே விதிமுறைகளை மீறி, முறையாக அனுமதி பெறாமல் கட்டடங்கள் அதிக அளவில் கட்டி வருகிறனர். ஆனால் வனத்துறையினர் இந்த இடத்தில் யானைகள் நடமாடுவதில்லை, விபத்துகள் இல்லை என்று கையூட்டு பெற்றுக்கொண்டு கட்டிடங்கள் கட்ட தடையின்மைச் சான்றுகளை வாரி வழங்கி வருகின்றனர்? மேலும், தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாசம்பாளையம் காப்புக்காடு அருகே விதிமுறைகளை மீறி லேஅவுட்டுகள் பிரிக்க வனத்துறை அதிகாரிகள் ஆயிரம் தேங்காய்களை கையூட்டாகப் பெற்றும் அதோடு கவ்வ வேண்டியதைக் கவ்விக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
வனப்பகுதியில் அருகே தனியார் கேளிக்கை பூங்கா, தனியார் இன்டர்நேஷனல் பள்ளி போன்றவைகள் வனத்துறையின் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கட்டடங்கள் அதிகமாக இருப்பதால் காட்டு யானைகள் தனது வழித்தடத்தை விட்டு வழி மாறி விவசாயத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று அட்டகாசம் செய்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்குவதால் அரசுக்கும் பெரும் தொகையும் வீணாகி வருகிறது.
வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தமிழ்நாடு வனத்துறை முதன்மை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுப்ரத் மஹோபத்ரா ஐஎப்எஸ், தமிழ்நாடு வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி ஆகியோர்கள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, வனப்பகுதியை விட்டு வெளியேறும் வன உயிரினங்களின் வழித்தடங்களை மறித்துக் கட்டியுள்ள முறைகேடான கட்டடங்களை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, அவைகளை அகற்றி வனத்தை வன உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்ததாக ஏற்படுத்த வேண்டும்.
காடு அழிந்தால் நாடே அழிந்து விடும்!
-கே.தமிழகம் சேட்