ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு, மான் மற்றும் பல்வேறு வன உயிரினங்களின் வசிப்பிடமாக உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) கள இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின்படி, ஆசனூர் வனகோட்ட துணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் சுதாகர் உத்தரவின்படி வனச்சரக அலுவலர்கள் மேற்பார்வையில் வனப்பகுதிகள் மற்றும் வனச்சாலைகளில் தொடர்ச்சியாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பவானிசாகர் வனச்சரக அலுவலர் செ.சிவக்குமார், கொத்தமங்கலம் பிரிவு வனவர், காவல் சுற்று வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலா்கள் கொண்ட சிறப்பு ரோந்து குழு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது போலிபள்ளம் சரகத்தில், போலிபள்ளத்திற்கு நீர் அருந்த வரும் புள்ளிமான்களை நைலான் வலைகளை கட்டி புள்ளிமானை வேட்டையாடிய சின்னச்சாமி, கார்த்திகேயன், சதீஷ்குமார், வெங்கடேஷ் ஆகிய நால்வரை வனத்துறையினர் கைது செய்தும், வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டது.
-கே.தமிழகம் சேட்