திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று (பிப்-08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சின்னவீரம்பட்டி ஊராட்சி பகுதிகளில் சொந்த இடம், வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் மிகுந்த சிரமத்தோடு வசித்து வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனைத்திட்டத்தின் கீழ் வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுத்து 32 ஆண்டு காலமாக தொடரும் அவல நிலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.