சென்னையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்வோர் அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் கவனமாக பார்த்துவிட்டு செல்லுங்கள். இன்றைக்கு சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. இந்நிலையில் சென்னையில் எந்த சாலைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி உள்ளது, மூடப்பட்ட சுரங்கப்பாதைகளின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இன்று(15.10.2024) சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் பிற்பகல் 2 மணி நிலவரம்.
மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள் பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை கணேசபுரம் சுரங்கப்பாதை சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை மேட்லி சுரங்கப்பாதை கெங்கு ரெட்டி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன 1. தானா தெரு 2. ஈவேரா சாலை எவரெஸ்ட் கட்டிடம் 3. குருசாமி பாலத்தின் கீழ் 4. பி.எஸ்.சிவசாமி சாலை 5. சேமியர்ஸ் சாலை 6. உடுப்பி முனை 7. வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு 8. சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் Advertisement 9. டேங்க் பங்க் ரோடு 10. ஸ்டெர்லிங் சாலை 11. பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி 12. தாஜ் வெலிங்டன் OMR 13. நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை பி.எஸ் 14. அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை 15. கால்வாய் பாலம், துரைப்பாக்கம் முதல் வெட்டுவாஞ்சேரி சாலை 16. பிராட்வே சந்திப்பு 17. பிரகாசம் சாலை 18. ஹைத் மஹால் 19. மண்ணடி மெட்ரோ 20. Blue Star சந்திப்பு 21. சிந்தாமணி 22. ஐயப்பன் கோயில் 23. நெற்குன்றம் ரயில் நகர் நோக்கி, 200மீட்டர் சாலைக்கு அருகில் HP பெட்ரோல் பங்க். 24. மெட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம் வரை. 25. பட்டுலாஸ் சாலை 26. பால் வெல்ஸ் சாலை.
மேட்லி சுரங்கப்பாதை – கண்ணம்மாபேட்டை – முத்துரங்கன் சாலை – 17 அடி சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பெரம்பூர் சுரங்கப்பாதை – முரசொலி மாறன் பாலம் கணேசபுரம் சுரங்கப்பாதை ஸ்டீபன்சன் சாலை, ஜமாலியா, முரசொலி மாறன் பாலம், வரும் திசை – மூர்த்தி சாலை, பிபி சாலை, பெரம்பூர். iv. சுந்தரம் பாயிண்ட் – ரயில்வே பாலம். மழைப் பொழிவு காரணமாக ஏதேனும் மாற்றுப்பாதைகள்: திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸிலிருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை.