நடிகர் பிரித்விராஜ் என்கின்ற பப்லுக்கு வயது 57 ஆகிறது. இருப்பினும் இக்கால இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்புடன் வைத்து கடினமான உடற்பயிற்சிகளையும் அசால்ட்டாக செய்து முடிக்கிறார். பிரித்விராஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் சிறப்பு, குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குழந்தை பருவம் முதலில் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் பப்லு பிரித்திவிராஜ் சமீகாலமாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இடையில் தொலைக்காட்சியில் போட்டியாளராகவும் கூட கலந்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கக்கூடிய ஒரு ஆள்தான் பப்லு பிரித்திவிராஜ்.ஆனால், கடந்த ஒரு வருட காலத்தில் அவருடைய இமேஜ் பொதுவெளியில் டேமேஜ் ஆகி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இதற்கு முக்கியமான காரணம் இவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட ஷீத்தல் என்ற இளம் பெண் தான்.

வெறும் 23 வயது ஆன ஷீத்தல் பப்லூவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். தன்னுடைய மகளை விட குறைவான வயது கொண்டவர் ஷீத்தல். அவரை திருமணம் செய்து கொண்ட பிரித்திவிராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த விமர்சனங்கள் வந்த போது பிரித்விராஜ் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அவர் பல்வேறு பேட்டிகளில் நான் செய்தது எந்த தவறும் கிடையாது உங்களுடைய எதிர்பார்ப்புக்கு நான் வாழ முடியாது என்பது போல பேசியிருந்தார்.

இந்த வயதிலும் பொம்பள சோப்பு கேக்குதா..?” என்று உங்களை பற்றி மீம்களை வெளியிடுகிறார்கள் இணையவாசிகள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்று கேட்டதற்கு… “கேட்குதே” என்று பதிலளித்திருந்தார்.மட்டுமில்லாமல் என்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணம் எனக்கு ஷீத்தல் கொடுக்கக் கூடிய விஷயங்களை என்னுடைய முதல் மனைவி எனக்கு கொடுக்கவில்லை.

நான் தற்பொழுது ஷீத்தலுடன் தொடர்பில் இருப்பதை பற்றி என்னுடைய முன்னால் உன்னை கண்டிப்பாக நல்ல விதமாக நினைக்க மாட்டாள். வயிறு எரிவால். மன அழுத்தம் அடைவாள்.. தவிர, நான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டால்.. என்றெல்லாம் தன்னுடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி குறித்து பேசி இருந்தார் பப்லு பிரித்திவிராஜ்.

உங்கள் மனைவியுடன் ஆயிரம் சண்டைகள் இருக்கும்.. இருவரும் பிரிந்து விட்டீர்கள்.. அதற்காக இப்படி பொதுவெளியில் அவரைப் பற்றி உங்களுடன் வாழ்ந்த ஒருவரை பற்றி பேசுவது சரி கிடையாது..? ஒரு கணவனாக நீங்கள் தோற்று விட்டீர்கள்..?

உங்கள் மனைவி எப்படிப்பட்டவர் என்று பொதுவெளியில் வைப்பது மிகவும் தவறு. ரகசியமாக இருக்க வேண்டிய விஷயத்தை நீங்கள் ரகசியாமாகவே வைத்திருக்க வேண்டும் அது தான் உங்களுடைய திருமண பந்தத்திற்கு நீங்கள் கொடுக்க கூடிய அதிகபட்ச மரியாதை என்று அப்போதும் பிருத்விராஜை விளாசினார்கள் ரசிகர்கள்.

இதற்கு ஏற்றார் போல தற்போது தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தலை பிரிந்திருக்கிறார் பப்லு. இது குறித்து பப்லு பல்வேறு பேட்டிகளில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டது தவறு என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஷீத்தல் இது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசியது கிடையாது. தன்னை பற்றியும் பப்லூவை பிரிந்தது பற்றியும் பல்வேறு விஷயங்களை இணையத்தில் பரவி வருகின்றனர். உச்சகட்டமாக, உடலுறவி விஷயத்தில் தன்னை அவரால் திருப்தி படுத்த முடியாததால் தான் அவரை பிரிந்து விட்டேன் எனும் அளவுக்கு மோசமான தகவல்கள் எல்லாம் இணையத்தில் பரவிக்கொண்டிருகிறது.

இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக ஒரு பதிவை தன்னுடைய விவாகரத்து குறித்தும் அதற்கான காரணம் குறித்து ரசிகர்களுக்கு கூறும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் ஷீத்தல்.

அதில், கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதோ.. எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதோ.. வாழ்க்கை அல்ல.. வாழ்க்கை வாழ்வதற்கு தான்.. என்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் பப்லுவை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் அவர் தன்னை பற்றி இணைய பக்கங்களில் பேசியது குறித்தும் ஷீத்தல் வருத்தப்படவில்லை என்பது எதன் மூலம் தெரிகிறது.

மட்டுமில்லாமல் ஷீத்தல் மற்றும் பப்லு பிரிவு குறித்து மோசமான விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதைப்பற்றி நான் கவலை கொள்ள போவதில்லை என்று கூறும் விதமாக இந்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷீத்தல்.