மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலுக்கு விமானப் படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லி கணேஷின் மனைவியிடம் தேசியக்கொடி கொடுக்கப்பட்ட நிலையில் அதனை கட்டியணைத்து அவரது மனைவி அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

தமிழ் திரையுலகில் நடிப்பால் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். எல்லோரிடமும் மிகுந்த அன்பாகவும், இயல்பாகவும் பழகும் பண்பு கொண்டவர்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு டெல்லி கணேஷின் சொந்த ஊராகும். இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றி வந்த நிலையில், திரைத் துறையின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அப்பணியை உதறிவிட்டு திரைத் துறைக்கு வந்தவர். திரைப்படங்களுக்கு முன்பு அவர் டெல்லியை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். கணேஷ் இந்திய விமானப் படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றினார், அதற்கு பின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த பணியில் இருந்து விலகினார். டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். இதன் காரணமாக அவர் டெல்லியில் தங்கி இருந்தார். இயக்குநர் பாலச்சந்தர்தான் இவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயரை வைத்து அன்போடு அழைத்தார். SKIP சுமார் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாசி (1979) திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசைப் பெற்றார். அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி (1994) போன்ற பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றார். சிந்து பைரவி (1985), நாயகன் (1987), மைக்கேல் மதன காம ராஜன் (1990), ஆஹா..! (1997) மற்றும் தெனாலி (2000) ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. அதன்பின் பல யூ டியூப் சேனல்களிலும் கூட இவர் நடித்து உள்ளார்

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ் (80) நேற்று முன்தினம் இரவு காலமானார். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உறங்கச் சென்ற நிலையில் 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், விஜய், கார்த்தி உள்ளிட்ட பலரும் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேசியக்கொடி போர்த்திய நிலையில் டெல்லி கணேஷின் உடல்

மேலும் அவருடன் நடித்த பல திரை நட்சத்திரங்கள் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயாணத்தில் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப் படை சார்பிலும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அவரது மனைவியிடம் தேசியக் கொடியை விமானப் படையினர் ஒப்படைத்தனர். அப்போது, தேசியக் கொடியை கட்டியணைத்து டெல்லி கணேஷ் மனைவி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது.