தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.