திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு பழநி ஆண்டவர் கலைக்கல்லூரியின் கூட்ட அரங்கில் இன்று (பிப்-07) 1974 இல் அதாவது 50 வருடங்களுக்கு முன்பு இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
1994 இல் இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் நீதித்துறை, வங்கி, வருவாய்துறை, பத்திரப்பதிவுத்துறை, வெளிநாடு பணி, சுயதொழில் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரியின் தற்போதைய வரலாறு, பொருளியல் மற்றும் இன்னும் சில துறை தலைவர்கள் மற்றும் நூலகர் சிறப்புரையாற்றினர்.சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக முன்னாள் மாணவர்கள் பொன்னாடை அணிவித்து அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர். முன்னாள் மாணவர்களின் வயது தற்போது 70 க்கும் மேல் இருந்தாலும் அவர்கள் ஆசிரியர்களிடத்தில் காட்டிய மரியாதையும் அன்பும் பார்ப்போர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
கல்லூரிக்கால தோற்றமும் தற்போதைய தோற்றமும் முழுதாக மாறிப்போனதால் தன்னுடன் படித்த நண்பர்களையே சிலருக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இருப்பினும் தங்களை ஒருவொருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கல்லூரிக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டு பேசினர்.
இந்த முன்னாள் மாணவர்கள் சத்திப்புக்கான ஏற்பாட்டை நரேந்திரன், நடராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். குரூப் போட்டோ எடுத்துவிட்டு செல்பிஃயை தட்டிவிட்டவாறு அனைவரும் பிரிந்து சென்றனர்.
இவ்வுலகில் எதிரி இல்லாத மனிதனை காட்டிவிடலாம் ஆனால் நண்பன் இல்லாத மனிதனை காட்டவே முடியாது என்பதுதான் நட்பின் மகத்துவம்!